தன்னை எதிர்க்கிறவர்களை இப்படித்தான் க்ளீன்போல்ட் ஆக்குவாரா அஜித்? கலைப்புலி தாணுவுக்கு ஏற்பட்ட நிலைமை?

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு முன்னணி மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகாலங்களில் பல பேர் வசை பாடி அதை கேட்டு கேட்டே சினிமாவில் இந்தளவுக்கு உயரத்தை அடைந்தவர் அஜித். ஒரு பக்கம் மன வலிகளோடு இருந்தாலும் இன்னொரு பக்கம் உடல் முழுவதும் பல வலிகளுடனேயே இன்னமும் தன் கெரியரை கொண்டு செலுத்தி வருகிறார்.

பெரிய பழுவேட்டரையரின் உடம்பில் இருக்கும் காயங்களை விட அஜித்துக்குத்தான் அதிக விழுப்புண் இருக்கும் போல. அந்தளவுக்கு ரேஸில் பல விபத்துக்களை சந்தித்து உடம்பு முழுவதும் ப்ளேட்டுகளை பொருத்தி தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: அமிதாப்பச்சானிடம் பல்பு வாங்கிய சீயான்… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் செம போங்க!…

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தை பற்றி ‘அஜித் எந்தளவுக்கு நல்லவரோ அதே அளவுக்கு கெட்டவரும் கூட’ என கூறி சில நடந்த சம்பவங்களை கூறினார். அதாவது ஒரு படத்தின் படப்பிடிப்பு வெளி நாட்டில் நடந்ததாம். அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாதியிலேயே ஒட்டுமொத்த படக்குழுவையும் விட்டுவிட்டு வந்துவிட்டாராம்.

அந்த நேரத்தில் அஜித்தான் தன் சொந்த செலவில் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்தாராம். இது அவருடைய மனிதாபிமானத்தை காட்டும் செயலாக இருந்தாலும்க் கூட இந்த சம்பவம் அவரின் கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கியே செல்லம்!.. கனிகாவின் கட்டழகில் கிறங்கிய நெட்டிசன்கள்…

அதாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் சமயத்தில் அஜித் வீல் சேரில் உட்காருகிற மாதிரி நிலையில்தான் இருந்தாராம்.உடனே படத்தின் இயக்குனர் ராஜூவ் மேனன் வேறொரு நடிகரை மாற்றிடலாமா என கேட்க தாணு கொஞ்சம் பொருங்கள் என அஜித்திடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அஜித் தாணுவிடம் ‘ஒரு வார காலம் பொறுத்திருங்கள். கண்டிப்பாக வருவேன்’ என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் தாணு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க நேராக வீல் சேரிலேயே அஜித் தாணு அலுவலகத்திற்கு வந்து ‘வீல் சேரில் வந்த எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் நடந்து வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

இதையும் படிங்க: காக்கா – கழுகு கதை.. சூப்பர்ஸ்டார் பட்டம்.. லெஜெண்ட் சரவணா என்ன சொல்றாரு பாருங்க!..

சொன்னபடியே வந்து படத்தில் நடித்துக் கொடுத்தாராம். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு தாணுவுடன் எந்த படத்திலேயும் அஜித் இணையவில்லையாம். ஆனால் தாணு மனைவி இறந்த சமயத்தில் முதல் ஆளாக நின்றது அஜித்தானாம். அதே போல் எந்தெந்த படத்தில் தன்னை அவமதித்து பேசினார்களோ அந்த படத்தின் இயக்குனரோடோ அல்லது தயாரிப்பாளரோடோ அஜித் மீண்டும் இணையவே இல்லையாம்.

 

Related Articles

Next Story