தலீவனுக்கு தில்லை பார்த்தியா!.. எல்லாம் வடை ஃபேக்டரி ஓனர்களாம்.. பிரபலங்களை கதற விட்ட ப்ளூ சட்டை!

Published on: August 19, 2023
---Advertisement---

யூடியூபை திறந்தாலே புதிய படங்கள் பற்றிய உண்மையான தகவல் என்பது போலவே தங்களுக்குத் தெரிந்ததை உருட்டி வருகின்றனர் இந்த பிரபலங்கள் என சினிமா விமர்சகர்கள், சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் என அனைவரையுமே வான்ட்டட்டாக சென்று வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

செய்யாறு பாலு, பாஃப்டா தனஞ்செயன், திருப்பூர் சுப்பிரமணியம், இயக்குநர் பிரவீன் காந்தி, தயாரிப்பாளர் கே. ராஜன் என அனைவரையும் ப்ளூ சட்டை மாறன் ட்வீட்களை போட்டே வச்சு செய்து வருகிறார்.

இதையும் படிங்க: ஹீரோயினோட சேலையை உருவி!.. அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன்!.. அந்த சீன் பற்றி பேசிய மன்சூர் அலி கான்!..

யூடியூப் பிரபலங்களுடன் சண்டை: 

அந்த பிரபலங்களும் யூடியூப் பேட்டிகளில் பேசும் போது ப்ளூ சட்டை மாறனை பதிலுக்கு கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர். இவை எல்லாத்துக்கும் காரணம் ஜெயிலர் படத்தை பற்றி தொடர்ந்து ப்ளூ சட்டை ட்ரோல் செய்தும் அந்த படக்குழுவில் இருந்து ஒருத்தரும் காண்டாகாமல் சோஷியல் மீடியா பிரபலங்கள் மட்டும் காண்டானது தான் காரணம் என்கின்றனர்.

ஜெயிலர் படம் மொக்கை படம் என்றும் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படத்தின் வசூலை எல்லாம் அது முறியடிக்காது என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளி வீசி வந்தார் ப்ளூ சட்டை மாறன். மனோபாலா, ரமேஷ் பாலா உள்ளிட்ட டிராக்கர்கள் 400 கோடி, 450 கோடி என எல்லை மீறி செல்ல, சன் பிக்சர்ஸ் சமஸ்தானமே ஆட்டம் கண்டு, விட்டா இவனுங்க 1000 கோடிக்கு இழுத்து விட்டு அடுத்த ஐடி ரெய்டுக்கு வழி வகுத்துடுவானுங்க என 375 கோடி தான் இதுவரை வந்திருக்கு என சன் பிக்சர்ஸே தீவிர மெளன விரதத்தை கலைத்து விட்டது.

இதையும் படிங்க: கடலிலேயே 7 போட்டு கலக்கிய கமல்!.. எத்தனை படம் இருந்தாலும்!.. பிக் பாஸ் சீசன் 7 தான் முக்கியமாம்!..

எல்லாமே வடை ஃபேக்டரி ஓனர்கள் தான்:

அதனை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் யூடியூபில் அந்த படத்துக்கு பெரிய பில்டப் கொடுத்து பேசிய அத்தனை பேருமே வடை ஃபேக்டரி ஓனர்கள் தான் என மீண்டும் விளாச ஆரம்பித்துள்ளார். லேட்டஸ்ட்டாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்

1. சொம்பு விஷயம் – சொல்லலைன்னாலும் அதான நிஜம்?

2. தோ கிலோ மீட்டர். அவதார் ரெகார்ட் அவுட்.

3. 500 கோடி,

4. அரசியலுக்கு வருவாரா? அள்ளி விடப்பா. அள்ளி விடு. என பதிவிட்டு அத்தனை யூடியூப் வீடியோக்களின் ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் போட்டு அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.