Connect with us

latest news

கடலிலேயே 7 போட்டு கலக்கிய கமல்!.. எத்தனை படம் இருந்தாலும்!.. பிக் பாஸ் சீசன் 7 தான் முக்கியமாம்!..

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அட்டகாசமான புரமோவுடன் உலக நாயகன் கமல்ஹாசன் கம்பேக் கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

விஜய் டிவியில் ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அந்த கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். சினிமாவில் நடிப்பதை விட அதிக சம்பளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தான் வருகிறது என மீண்டும் ரிட்டர்ன் ஆகி விட்டார் ஆண்டவர்.

இதையும் படிங்க: அப்போ எல்லாம் 250 நாள்!.. இப்போ 50 நாளுக்கே ஆடுறாங்க!.. மாமன்னன் டீமை மானபங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்!..

பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், முதல் முறையாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அசத்தல் புரமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அந்த புரமோ டீசர் வீடியோவில் கமல்ஹாசன் மாலத்தீவு கடலில் 7 டிசைன் போட்ட பாதையின் மீது நின்றபடி போஸ் கொடுத்து, ஐ வில் பி வாட்சிங் யூ என பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரத்தை வசனத்தால் சொல்லாமல், கண்கள் மற்றும் கை அசைவாலே சொல்லி அதிர வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்லர், லியோ எல்லாத்தையும் ஓரங்கட்டுங்க! இனிமே எங்க ஆட்டம்தான் – அறிவிப்பை வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 7

கூடிய சீக்கிரமே பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்க உள்ள நிலையில், அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துக் கொள்ளப் போகின்றனர் என ஏகப்பட்ட தகவல்கள் கசிந்து வருகின்றன. விஜய் டிவியின் ஜாக்குலின், இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு, பாடகி ராஜலட்சுமி, விசித்ரா, திருநங்கை மிலா, நடிகை ரேகா நாயர், ரச்சிதா கணவர் தினேஷ் என ஏகப்பட்ட பெயர்கள் போட்டியாளர்கள் லிஸ்ட்டாக அடிபட்டு வருகிறது.

விரைவில், உறுதியான போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 17 அல்லது செப்டம்பர் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் ஆகும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த முறையாவது பெண் போட்டியாளர் டைட்டிலை வின் பண்ணுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

google news
Continue Reading

More in latest news

To Top