Cinema News
ரகசிய பார்ட்டியில் நடந்த கலாட்டா!.. வீடியோவை வெளியிடுவேன் என தலைவரை மிரட்டும் ப்ளூ சட்டை மாறன்?..
ஜெயிலர் படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் நடிகர் ரஜினிகாந்த் சீனியர் சினிமா பத்திரிகையாளர்களுக்கு வைத்த ரகசிய பார்ட்டியில் பங்கேற்றதாகவும் அங்கே நடந்த சம்பவங்களை வீடியோவாக படம் பிடித்து இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உருட்டி உள்ளார்.
இமய மலையில் இருந்து திரும்பியதும் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாட கறி விருந்து கொடுக்கப் போகிறார் ரஜினிகாந்த் என்கிற தகவல் ஒரு பக்கம் பரவிய நிலையில், பார்ட்டியே வைத்து விட்டார் என்றும் செய்யாறு பாலுவின் பெயரை மாற்றி செய்யாறு ரவி என பெயரை மாற்றிப் போட்டு ஆங்கிலத்தில் ஒரு பெரிய நீண்ட கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொதுவா இதெல்லாம் ரஜினி பண்ண மாட்டாரே!.. ஜெயிலர் வசூல் தந்த சந்தோஷம்!.. அதுக்கு தலையாட்டிட்டாராம்!..
ரஜினியின் ரகசிய பார்ட்டி:
ஜெயிலர் படத்தின் மீது ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து வன்மத்தை கக்கினாலும், அவரும் இந்த பார்ட்டிக்கு வர வேண்டும் என ரஜினிகாந்த் ஆசைப்பட்டுக் கூப்பிட்டதாக செய்யாறு ரவி சொன்னார். ஆனால், நான் அங்கே வர முடியாது என்று ஆரம்பத்தில் சொன்னேன். தொடர்ந்து என்னை வற்புறுத்திய நிலையில், ஒரு கண்டிஷன் உடன் கலந்துக் கொள்ள முடிவு செய்தேன் என்றார்.
ரஜினிகாந்தின் ரகசிய பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், நான் மொபைல் போன் எடுத்துக் கொண்டு தான் வருவேன். சில நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்துக் கொள்வேன். அப்போது தான், ரஜினி காலில் ப்ளூ சட்டை மாறன் விழுந்து மன்னிப்புக் கேட்டார் என சோஷியல் மீடியாவில் பொய் பரப்ப மாட்டார்கள் என பெரிய உருட்டாக உருட்டி உள்ளார்.
இதையும் படிங்க: வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…
11 மணிக்கு ஆதாரத்தை வெளியிடுவேன்:
மேலும், அந்த பார்ட்டிக்கு சென்ற இடத்தில், அவர் நினைத்ததை போலவே அவரை அசிங்கப்படுத்தியதாகவும், அதனால் வீடியோ ஆதாரத்தை 11 மணிக்கு வெளியிடப் போகிறேன் என ரஜினிகாந்தை மிரட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
குறிப்பு: இதில், எங்கேயும் செய்யாறு பாலு என்றோ, ரஜினி என்றோ ப்ளூ சட்டை மாறன் குறிப்பிடவில்லை. பதிலுக்கு செய்யாறு ரவி மற்றும் தலைவர் என்றே கிசுகிசு செய்தி போல போட்டு இருக்கிறார். ஜெயிலர் வசூலை சொல்றவங்கள வடை மெஷின் என சொல்லி வந்த ப்ளூ சட்டை மாறன் வடை ஃபேக்டரியாகவே மாறிவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால், ப்ளூ சட்டை மாறனின் ரசிகர்கள் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என நம்பி 11 மணிக்காக காத்திருக்கின்றனர்.
A day before Thalivar's departue to Himalaya, i received a call from his loyal friend and ancient journalist Seyyar Velu in the morning. Here is the conversation:
Velu 'Hello Mr.Maran. We (The diehard supporters of Thalivar from various domains called Social media influencers,…
— Blue Sattai Maran (@tamiltalkies) August 17, 2023