நேரத்துக்கும் காசுக்கும் புடிச்ச கேடு… சிக்கந்தர் படம் அவ்ளோ மோசமாம்… விளாசிய புளூசட்டைமாறன்

blue satta sikkander
Sikkander review: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நேற்று சிக்கந்தர் படம் வெளியானது. சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் விமர்சனம் குறித்து புளூசட்ட மாறன் இப்படி சொல்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம். படத்தோட ஆரம்பத்துல பிளைட்ல பெரிய வீட்டுப் பையன் பொம்பளைக்கிட்ட சில்மிஷம் பண்ணிடுறான். அதை ஹீரோ பார்த்துட்டு பொளந்துடறாரு. அதைப் பார்த்துட்டு ஊருல ஒரு பையன் அவங்க அப்பா கிட்ட சொல்லிடுறான். அவங்க அப்பா ஒரு மந்திரி. நம்ம பையன் மேல கையை வச்சவன சும்மா விடக்கூடாதுன்னு போலீஸ்கிட்ட சொல்றாரு.
அவங்க சல்மான்கானை அரெஸ்ட் பண்ண வர்றாங்க. அவரு மிகப்பெரிய செல்வந்தர். ஏகப்பட்ட வில்லங்கம் பண்ணி 50 கேஸ் இருக்கு. அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ண முடியாது. இதைப் போயி சத்யராஜிக்கிட்ட சொன்னதும் அவரு விட்டுப் புடிப்போம்னு இருந்துடறாரு. ஹீரோயின் திடீர்னு இறந்துடறாரு. அதனால ஹீரோ கவலையில இருப்பாரு. ஹீரோயின் இறக்கும்போது அவங்க உடலைத் தானம் செஞ்சிருப்பாரு.
அதுல 3 பேருக்கு 3 முக்கியமான உறுப்புகளைக் கொடுத்துருப்பாரு. அவங்க யாருன்னு பார்க்க ஹீரோ கிளம்பி பாம்பேக்கு வர்றாரு. அதுல ஒரு பையன் சேரில இருப்பான். ஒரு பொண்ணு அக்ரஹாரத்துல இருப்பான். இன்னொரு பொண்ணு ஹார்ட் ஆபரேஷன் பண்ணிருக்கு. இந்த 3 பேரையும் சந்திக்க வரும்போது வில்லன் பார்த்துடறான். ஹீரோவைக் கட்டம் கட்டுறான். அப்போ என்ன ஆகுதுங்கறதுதான் கதை.
திரைக்கதைதானே முக்கியம். அது பிளாட்டா இருக்கு. வில்லன் கேரக்டர் நின்னாதான் படம் நிக்கும். இது ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு சொல்லவே தேவையில்லை. இந்தப் படத்துல வில்லனுக்கு வேலையே இல்லை. பர்ஸ்ட் சின்ன வில்லன் போயி அடிவாங்கி வந்துடறான். பெரிய வில்லனுக்குத் தெரிஞ்சதம் போலீஸ எல்லாம் அழைச்சி எப்படியாவது அவனை புடிச்சிட்டு வந்துடுங்கன்னு சொல்றாரு. அவங்க எப்பவுமே பிடிக்க போல. பிடிக்கவும் இல்லை. கடைசியா ஹீரோவை ஆஸ்பிட்டல்ல வச்சி அடிக்க ஆள அனுப்பி விடுறாரு. இவ்ளோதான் வில்லத்தனம்.
படத்துல ஆக்ஷன் பயங்கரமா இருக்குன்னு பார்த்தா புஸ்;க்குன்னு போயிடுது. படத்துல சல்மான்கான் பத்து பைசாக்குக் கூட நடிக்கல. வயசானதுக்காக டிஏஜிங் பண்றதா வேலை செஞ்சிருக்காங்க. அதனால கொஞ்சநஞ்ச எக்ஸ்பிரஷனும் இல்லாமப் போயிடுச்சு. கமல் படத்துல பேண்டை அவுக்குற மாதிரி சீனு இருக்கும். இந்தப் படத்துல சல்மான்கான் சட்டையைக் கழட்டுவாருன்னு பார்த்தா கழட்டாம விட்டுடறாரு.
படத்துல எல்லாரும் நல்ல டெக்னீஷியனாகத்தான் இருக்காங்க. ஆனா எல்லாருமே வேண்டா வெறுப்பாகத்தான் நடிச்சிருக்காங்க. படத்துல ஒரு சீனாவது நல்லாருக்கும்னு பார்த்தா எதையுமே சொல்றமாதிரி இல்லை. அவ்வளவு மோசமா எடுத்துருக்காங்க. நேரத்துக்கும், காசுக்கும் பிடிச்ச கேடுதான் இந்தப் படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.