கோட் ஃபீவர் ஸ்டார்ட்!.. நாம போட்டோக்களை எறக்கணும்!.. அஜித்தை பங்கம் பண்ணிய பிரபலம்!...

by சிவா |   ( Updated:2024-08-30 11:13:24  )
ajith
X

#image_title

Ajith Vijay: அஜித்தும், விஜயும் பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட இருவருமே 30 வருடங்களுக்கும் மேல் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்கள். அஜித் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

விஜயோ தனது அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் சினிமாவுக்குள் வந்தார். அப்பா தயாரித்து இயக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க துவங்கினார். அதுதான் அவரை மேலே கொண்டு போனது.

vijay-ajith

ஒருபக்கம் அஜித்தோ சாக்லேட் பாய் இமேஜில் படங்களில் நடித்து வந்தார். அதன்பின் பில்லா, மங்காத்தா படங்கள் மூலம் மாஸ் ஹிரோவாகவும் மாறினார். விஜயும் பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறி ஹிட் படங்களை கொடுத்தார். ரஜினி - கமல் போல விஜய் - அஜித் போட்டி உருவானது.

இதனால் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களும் பல வருடங்களாக சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வருகிறார்கள். படு மோசமாக விமர்சித்து கொள்கிறார்கள். ஆனால், விஜயும் அஜித்தும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள் என்பது போலவே செய்திகள் வெளிவரும்.

vijay kodi

vijay kodi

கோட் படம் துவங்கியபோது கூட அஜித் வாழ்த்து சொன்னதாக வெங்கட்பிரபு சொன்னார். ஆனால், விஜய் நடிக்கும் படங்கள் தொடார்பான செய்திகள் வெளியாகும்போது அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகும். எல்லா ஊடகங்களும் விஜயை ஃபோகஸ் செய்யக்கூடாது என்பதற்காக அஜித் தரப்பு இதை தொடர்ந்து செய்வதாகவும் ஒரு செய்தி உண்டு.

இந்நிலையில், புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘தம்பி.. கோட் ரிசர்வேசன், புரமோசன் எல்லாம் ஆரம்பிக்க போகுது. அப்புறம் ரிலீஸ், ரிவ்யூ, சக்ஸஸ் மீட்டூன்னு போகும். அதுக்கு அப்புறம் கட்சி மாநாடு வேற இருக்கு. 3 வாரத்துக்கு மொத்த மீடியா ஃபோகஸும் அங்கதான் இருக்கும். அதனால நாம தொடர்ந்து போட்டோக்களை எறக்கனும். உனக்கு சன்டே கூட லீவ் இல்ல. கூடவே இரு' என அஜித் தனது ரசிகர்களிடம் சொல்வது போல மீம்ஸ் ஒன்றை பகிர்ந்து கிண்டலடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கூலி கிளைமேக்ஸில் இப்படிதான் வடை சுடுவார் லோகேஷ்!.. பங்கம் செய்த புளூசட்ட மாறன்!…

Next Story