இப்ப தும்முனாதான் சரியா இருக்கும்!.. பயில்வான் ரங்கநாதனை கலாய்க்கும் புளூசட்ட மாறன்...
பெண்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகள் என்பது எல்லா துறையிலும் இருக்கிறது. ஆனால், அதிகம் இருப்பது சினிமா துறையில்தான். அதற்கு காரணம் சினிமாவில் நடித்து ரசிகர்களிடம் புகழடைந்து பல கோடிகள் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடி வரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களில் பலரை டார்கெட் செய்வார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைதான் ‘அட்ஜெஸ்மெண்ட்’. நீங்க கொஞ்சம் இயக்குனர்.. அப்புறம் தயாரிப்பாளரோட அட்ஜெஸ்ட் பண்ணா உங்களுக்கு கண்டிப்பா இந்த படத்தில் வாய்ப்பு என சிலர் நேரிடையாகவே கேட்பார்கள்.
இதையும் படிங்க: ‘தங்கலான் விருந்து’ ஆத்தாடி இதெல்லாம் இருந்துச்சா?
சிலரோ, ‘இயக்குனர் உங்களை தனியாக சந்திக்க ஆசைப்படுகிறார்’ என சொல்வார்கள். இதெல்லாம் சிக்னல் கோட்வேர்ட். பெரும்பாலும், புதிதாக சின்ன பட்ஜெட்டுகளில் படமெடுக்க வரும் உப்புமா கம்பெனியில் இருப்பவர்கள் இதை அதிகம் செய்வார்கள். அப்படியெனில் பெரிய பட்ஜெட் படங்களில் நடப்பதில்லையா என்றால் நடக்கும். ஆனால், வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்.
கேரள சினிமாவில் வாய்ப்பு கேட்டு சென்ற நடிகைகளிடம் முக்கிய நடிகர்கள் பாலியல் சீண்டல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு பல பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள். மோகன்லால் தலைமையில் செயல்பட்டு வந்த அம்மா எனும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அஜித், விஜய்க்கு முந்தைய கால நடிகர்கள் ஒழுக்கமானவர்களா? புது பிரச்சினையை கிளப்பிய நடிகை
மலையாள நடிகர்கள் சித்திக். ஜெயசூர்யா உள்ளிட்ட சிலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருப்பதால் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இது மலையாள சினிமாவில் மட்டுமில்லை. கோலிவுட்டிலும் இருக்கிறது என பலரும் பேச துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் டிவிட்டர் பக்கத்தில் ‘இப்ப தும்முனாத்தான் சரியா இருக்கும்’ என வடிவேலு காமெடி ஒன்றில் வரும் ஒரு காட்சியை மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார். பல வருடங்களாக சினிமாவில் நடிகர், நடிகைகள் செய்யும் அந்தரங்க வேலைகளை பயில்வான் ரங்கநாதன் புட்டு புட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.