Connect with us

Cinema News

Kanguva: எல்லாரும் கங்குவாவை கழுவி ஊத்த இவர்தான் காரணம்!.. இப்படி பண்ணிட்டியே புரோ!…

Kanguva: சூர்யாவின் 2 வருட கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். மிகவும் அதிகமான பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.

2 வேடங்களில் சூர்யா நடித்திருந்தாலும் கங்குவாவாக வரும் சூர்யா அசுரத்தனத்தை காட்டியிருக்கிறார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகி முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தமிழில் உருவான முதல் பேன் இண்டியா படம் இதுதான் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜவே கூறினார்.

இதையும் படிங்க: Kanguva: கொஞ்சமா பண்ணீங்க!. ஓவர் கான்பிடன்ஸ் வச்ச ஆப்பு!. ஞானவேல் ராஜாவை பழிதீர்த்த எஸ்.கே!…

அதோடு, இந்த படம் 2 ஆயிரம் கோடியை வசூலிக்கும் என்றெல்லாம் அடித்துவிட்டார். இன்று காலை 9 மணிக்கு இப்படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஒரு சில ஊர்களில் மட்டும் அதிகாலை 7 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது.

எனவே, விமர்சகர்களும், சூர்யா ரசிகர்களும் இப்படத்தை அங்கு சென்று பார்த்துவிட்டனர். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு, விஸ்வல் எஃபெக்ட்ஸ். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் சிறப்பாக இருப்பதாக பலரும் சொன்னாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை என சொல்லப்படுகிறது.

kanguva

kanguva

குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என படம் பார்த்த ரசிகர்கள் சொல்கிறார்கள். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் இரைச்சலாக இருப்பதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் டிவிட்டரில் ‘எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரத்தான். இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல’ என நக்கலடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: சூர்யா நடிப்பு மட்டும் போதுமா?!.. கதைன்னு ஒன்னு வேணாமா?!.. 2 ஆயிரம் கோடி வருமா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top