Kanguva: கொஞ்சமா பண்ணீங்க!. ஓவர் கான்பிடன்ஸ் வச்ச ஆப்பு!. ஞானவேல் ராஜாவை பழிதீர்த்த எஸ்.கே!...
Kanguva: தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. சுமார் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் படத்திற்கு குறைந்த திரையரங்குகளே கிடைக்க அமரன் திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதற்கு ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனை குறைத்து எடை அவருக்கே பெருத்த ஆப்பாக அமைந்துள்ளது.
முதலில் தீபாவளிக்கு முன் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் வேட்டையன் வந்ததால் சூர்யா பதுங்கினார். தொடர்ந்து தீபாவளிக்கு நிச்சயம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வந்தா சோலோவா தான் வருவேன். அப்போ தான் 2000 கோடி ரூபாய் கிடைக்கும் என ஸ்டூடியோ கிரீன் அடம்பிடித்தது.
அதோடு எல்லாம் சின்ன படங்கள் தானே என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அலட்சியமும் ஒரு காரணம். லப்பர் பந்து படத்தால் கிடைத்த உயிர்ப்பை திரையரங்குகள் தக்க வைத்திட அமரன் படம் மிகப்பெரும் அளவில் உதவியிருக்கிறது. இதனால் அதிக ஸ்கிரீன்கள் கங்குவாவிற்கு கிடைக்கவில்லை.
ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 3 படங்கள் அக்ரிமெண்ட் போட்டு அவரை ராஜா ராணி உட்பட எந்த படத்திலும் நடிக்க விடாமல் செய்தது. அவர்களுக்காக நடித்த மிஸ்டர் லோக்கல் படம் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டினை ஒரேயடியாக சரித்து விட்டது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் சிவாவுக்கு செஞ்சது இப்போ உங்களுக்கு எதிராவே திரும்பிருச்சு என, ஞானவேல் ராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர். தன் வினை தன்னை சுடும்!..
இதையும் படிங்க: Kanguva: படம் பேரு கத்துவா-ன்னு வச்சிருக்கணும்!… கங்குவாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!….