மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கூறி விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் இதுவரை தணிக்கை சான்றிதழை கொடுக்கவில்லை. கடந்த டிசம்பர் 18ம் தேதி தயாரிப்பு நிறுவனம் தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பியது. படம் பார்த்த அதிகாரிகள் சில மாற்றங்களை சொல்ல அதை செய்து டிசம்பர் 25ஆம் தேதி கொடுத்தார்கள்.
ஆனால் 10 நாட்களை தாண்டியும் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாததால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வரவுள்ளது. நாளைக்கு தீர்ப்பு படக்குழுவுக்கு சாதகமாக வந்தாலும் படம் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது. இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருபகக்ம், திரையுலகில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்தை விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Also Read
பராசக்தி படத்தில் நடித்திருக்கும் நடிகர் ரவி மோகனும் விஜய் பக்கம் தான் நிற்பதாக டிவி செய்திருக்கிறார். ஆனால், அந்த படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல்னு பாச மழை பொழிந்த திடீர் தளபதி மவுனமாக இருக்கிறார்.. இதுதான் அண்ணன் தம்பி பாசமா?.. ஏதாச்சும் பேசு ராசா!.. பயப்படாத.. நீதான் தைரியமான ஆளாச்சே’ என்று பதிவிட்டு கலாய்த்திருக்கிறார்.
ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பராசக்தி படத்தை ரிலீஸ் செய்வதற்கு பின்னணியில் சிவகார்த்திகேயன்தான் இருக்கிறார் என செய்திகள் வெளியானபோது அதற்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விளக்கமளித்த சிவகார்த்திகேயன் ‘எதையும் திட்டமிட்டு செய்யவில்லை.. இது தயாரிப்பாளரின் முடிவு.. அதில் பல கோடி வியாபாரம் இருக்கிறது.. இதை விஜய் சாரிடமே சொல்லிவிட்டோம்.. அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். யார் என்ன வேணாலும் சொல்லட்டும்.. இது அண்ணன் தம்பி பொங்கல்’ என்று பேசியிருந்தார்.
ஆனால், ஜனநாயகன் சென்சார் பிரச்சனையில் சிக்கியிருப்பதற்கு அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். இதைத்தான் புளூசட்டமாறன் நக்கலடித்திருக்கிறார்.



