More
Categories: Cinema News latest news

எப்பாடி… இவ்வளவு பெரிய தொகையா? புளூசட்டை மாறன் யூட்யூப் மாத வருமானம் என்ன தெரியுமா?

Bluesattai Maran: தமிழ் சினிமாவில் பிரபலங்களை விட படங்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் ரிவியூ சொல்லியே புகழ் அடைந்தவர் புளூசட்டை மாறன். அவர் தன்னுடைய யூட்யூப் கணக்கின் மூலம் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரைப்படங்களுக்கு விமர்சனங்களை பேப்பரில் படித்த காலம் போய் வீடியோவாக பார்க்கும் காலமாகிவிட்டது. அந்த ட்ரெண்ட்டை பயன்படுத்திக் கொண்ட பல ரிவ்யூவர்கள் இன்று பெரிய அளவில் புகழ் அடைந்திருக்கின்றனர். அப்படி ஒருவர்தான் புளூ சட்டை மாறன். தன்னுடைய ஸ்டைலில் வழக்கு தமிழில் சினிமாவுக்கு  விமர்சனம் செய்யும் புளூ சட்டை மாறனுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…

சூப்பர் ஸ்டார் படத்தில் தொடங்கி சின்ன பட்ஜெட் படம் வரை எல்லா படங்களின் நெகட்டிவ் மட்டுமே சொல்லி ஹிட்டு அடித்தவர். ஒரு கட்டத்தில் படம் எடுத்தால் தான் உங்களுக்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் கவலை தெரியும் என பல கமண்ட் அடித்தனர். இதனால் அவரே எழுதி, இயக்கி நடித்தார். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் ரிலீஸில் ஏகப்பட்ட பிரச்னைகள் வந்தது.

இதனால் சினிமா இயக்கும் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் தன்னுடைய விமர்சனங்களுக்கு வந்து இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் புளூசட்டை மாறன் தமிழ் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். 1.6 மில்லியன் பாலோயர்களை இந்த சேனல் கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அவரை பார்த்து இப்படி சொல்ல வேண்டுமா?!.. பாடகியை பார்த்து பயந்த எஸ்.பி.பி!..

கோடிக்கணக்கில் வியூஸ் வரும் இந்த சேனலுக்கு மாதம் சம்பளமாக 90 ஆயிரத்தில் தொடங்கி ஒரு லட்சம் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மத்தவங்கள கலாய்ச்சே ஒரு லட்சம் வருமானம் எடுக்கிறாரேயப்பா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Published by
Akhilan

Recent Posts