Cinema News
கொஞ்சமாவது நடிக்க கத்துக்குங்க.. மண்ட பத்தரம்!. விஜய் ஆண்டனியை போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்..
பல வருடங்களாகவே சினிமா விமர்சனம் என்பதை பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களில் எழுதினார்கள். ஆனால், எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ, யுடியூப் வீடியோக்கள் எப்போது பிரபலமானதோ அப்போதே யுடியூப்களில் சிலர் புதிய படங்களை விமர்சனம் செய்ய துவங்கினார்கள்.
அதில் ஒருவர்தான் புளூசட்ட மாறன். தமிழ் டாக்கிஸ் என்கிற யுடியூப் சேனலில் புதிய தமிழ படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவருக்கு திரையுலில் இயக்குனராக வேண்டும் என ஆசை. மேலும், நல்ல கதைகளை கொண்ட படங்களை மட்டுமே ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என்பது இவரின் கருத்து. ஆனால், இரண்டுமே நடக்கவில்லை. சினிமாவில் சாதிக்க முடியாத கோபத்தில் புதிய படங்களை கண்டபடி திட்டி விமர்சனம் செய்ய துவங்கினார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்
இன்னும் சொல்லப்போனால் அவர் செய்வதை விமர்சனம் எனவும் சொல்லமுடியாது. மசாலா படங்களை செமயாக நக்கலடித்து, கிண்டலடித்து பேசுவார். அதையும் பலரும் ரசிக்க துவங்கினார்கள். ரஜினி, விஜய், அஜித், சிம்பு என ஒருவரையும் விடமாட்டார். ரசிகர்களுக்கு பிடித்து படம் ஓடினாலும், அதை மொக்கை படம் என்றே பேசுவார். அதேநேரம், மசலா பாணியிலிருந்து விலகி எடுக்கப்படும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பாராட்டி பேசுவார். இதுதான் புளூசட்ட மாறனின் ஸ்டைல்.
இதனால் திரையுலகின் கோபத்திற்கு ஆளானார். சில இயக்குனர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்களும் நடந்தது. சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம்தான் ரோமியோ. இந்த படதை வழக்கம்போல் வச்சு செய்தார் மாறன். ஒருபக்கம், தியேட்டரிலும் இப்படத்திற்கு கூட்டம் இல்லை.
இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘திரைப்படங்களை விமர்சித்து கொல்லும் புளூசட்டமாறன் போன்ற சிலருக்கும், அவர் சொல்வதை கேட்டு ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் இருக்கும் அறிவுஜீவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க. இந்த படத்தை அன்பே சிவம் போல் ஆக்கிவிடாதீங்க’ என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: லேடி சூப்பர்ஸ்டாராக சாதித்த நயன்தாரா… 100 கோடிகளில் வீடு… சொத்துமதிப்பு மட்டும் இவ்வளோவா?
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாறன் ‘ரத்தம், கொலை என 2 தோல்விகளை கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. எனவே, இந்த படம் ஜெயிக்க வேண்டிய கட்டாயம். முதலிரவில் மனைவி சரக்கடிப்பது போல போஸ்டர் போட்டு விளம்பரம் செய்தார். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இப்போது விமர்சகர்களை திட்ட துவங்கிவிட்டார்.
அடுத்து ஒரு சக்சஸ் மீட் வைங்க.. செம தமசா இருக்கும். முதலில் கொஞ்சமாவது நடிக்க கத்துக்கோங்க. டைரக்டர், எடிட்டர் வேலையில தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. உங்க படம் நல்லா இருக்குன்னு மக்கள் சொல்லணும். அதேபோல், தப்பு தப்பா புரமோஷன் ஐடியா தரும் அல்லக்கைகளை விரட்டி விடுங்க.. உங்கள மாதிரி அப்பாவிகளை அவங்க அழகா மொட்டை அடிச்சிடுவாங்க.. மண்ட பத்தரம்’ என பதிவிட்டிருக்கிறார்.