Categories: latest news

விடாமுயற்சியை விட்டுத்தள்ளுங்க.. குட் பேட் அக்லி சூப்பர் அப்டேட் தெரியுமா?.. பாலிவுட்டே இறங்குது!..

லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்குமாரின் அடுத்த படமான குட் பேட் அக்லி படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனால், அதே லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்க அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் நடித்த வரும் விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை,

இதையும் படிங்க: நண்பர் ராஜ்பகதூர் செய்த மாற்றம்… ரஜினியை நடிகனாக்கிய அந்த ஸ்பெஷல் நிகழ்வு…

புஷ்பா படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்ததாக அஜித் குமாரை வைத்து குட் பேட் அக்லி படத்தை தயாரிக்க உள்ளது. அந்தப் படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்க மல்டி ஸ்டார் படங்களை தொடர்ந்து செய்து வரும் நிலையில், நடிகர் அஜித் குமாரும் குட் பேட் அக்லி படத்தில் ஏகப்பட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: தனுஷை அசிங்கப்படுத்தினாரா லதா ரஜினிகாந்த்?!.. விவாகரத்து பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அனிமல் படத்தின் வில்லன் பாபி தியோல் உள்ளிட்ட இருவரிடமும் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் நடிகை ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படம் ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு ஷூட்டிங் புறப்பட்டால் தான் அந்த படம் ஸ்டார்ட் ஆகும் என்றும் இல்லை என்றால் நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் தான் நடிக்க கிளம்பிவிடுவார் என்றும் கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago