Cinema News
இறுதிவரை நம்பிக்கையோடு இருந்த போண்டாமணி! நிறைவேறாமலேயே போன கடைசி ஆசை..
Actor Bondamani: வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் போண்டா மணி. ‘அடிச்சு கேப்பாங்க. சொல்லிராதீங்க’, ‘மூஞ்சியெல்லாம் தக்காளி சட்னியா இருக்கு’, ‘’ போன்ற வடிவேலுவுடனான காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
1983 ஆம் ஆண்டு இலங்கை அகதியாக வந்த போண்டா மணி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார். ஆனால் அந்தளவுக்கு வாய்ப்புகள் வராததால் மீண்டும் சிலோன் போனவருக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.
இதையும் படிங்க: ஷூட்டிங்குக்கு பல மணி நேரம் லேட்டா வந்த கமல்! திட்டமுடியாமல் தவித்த கே.பி – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
அங்கு அவரது பெற்றோர்கள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த போண்டாமணி மனசு வெறுத்து ஒரு வீடியோ கடை ஆரம்பித்தார்களாம். 1990 ஆம் ஆண்டு நடந்த ஈழத்துப் போரில் அந்த கடையும் தரைமட்டமாகியிருக்கிறது. அவர் காலிலும் குண்டடி பட்டு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மீண்டும் இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார்.
பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான போண்டாமணி ஏகப்பட்ட படங்களில் நடிக்க வடிவேலுவுடனான காம்போவால்தான் பிரபலமாகியிருக்கிறார். இடையில் அவர் சிறுநீரகம் செயலிழந்து டையாலிஸ் செய்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கடுப்பில் கத்திய விஜய்… சபதம் எடுத்த பிரபல நடிகர்… எந்த படத்துலனு தெரியுமா?…
அவருடைய மருத்துவ உதவிக்காக ரஜினி,விஜய் சேதுபதி, தனுஷ் என பண உதவிகளை செய்திருக்கின்றனர். வடிவேலுவும் அவருக்கு உதவி செய்வதாக கூறியிருந்த நிலையில் இதுவரை ஒருமுறை கூட அவரை வந்து பார்க்கவே இல்லையாம்.
இந்த நிலையில் நேற்று தன் வீட்டிலேயே மயக்கமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதே போன வருடம் பிப்ரவரி மாதம் மயில்சாமி இறப்பிற்கு வந்து கண்கலங்கி பேசிய போண்டாமணி இன்று தமிழ் சினிமாவையே கண்கலங்க வைத்து சென்று விட்டார்.
இதையும் படிங்க: எல்.ஆர்.ஈஸ்வரியை வெளியே துரத்திய ஒலிப்பதிவாளர்… அப்புறம் பாடகியானது எப்படி தெரியுமா?…
இந்த நிலையில் இவர் தன்னுடைய கடைசி பேட்டியில் உடல் நலம் பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்க வருவேன். அதுதான் என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.