Connect with us
vijay

Cinema History

கடுப்பில் கத்திய விஜய்… சபதம் எடுத்த பிரபல நடிகர்… எந்த படத்துலனு தெரியுமா?…

Vijay: தமிழ் சினிமாவில் வெற்றி, வசந்த ராகம் போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்தவர் நடிகர் விஜய். இவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின் காதலுக்கு மரியாதை, பிரியமானவளே போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இவரின் வளர்ச்சிக்கு இவரது தந்தையும் ஒரு முக்கிய காரணம். இவரின் முயற்சியாலேயே விஜய் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார் என்பது பலரும் அறிந்ததே.

இதையும் வாசிங்க:இந்த வருஷம் வெளியான 254 படத்துல இத்தனை படம் தான் தேறுச்சு!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!..

பின் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் தற்போது அரசியலில் ஈடுபடவும் தயாராகியுள்ளார். இதற்கான பல வேலைகளும் நடந்து கொண்டே வருகிறது. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம்தான் லியோ. இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடித்தும் வருகிறார். இவரின் அரசியல் வருகையை எதிர்பார்த்து இவரின் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக எந்தவொரு நடிகரனாலும் படபிடிப்பில் தனக்கென தனி கேராவேன் வைத்து கொள்வது வழக்கம்.

இதையும் வாசிங்க:இப்பவே அடுத்த பலியாடு விஜய் தான்னு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க!.. எல்லாத்துக்கும் காரணம் அதுதான்!..

ஒரு முறை போக்கிரி படபிடிப்பின்போது விஜய் தனது கேராவேனில் தூங்கி கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நடிகர் நெப்போலியன் வந்துள்ளார். அவரின் நண்பர்கள் விஜயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட அவர்களை அழைத்து நெப்போலியன் அங்கு சென்றுள்ளார். ஆனால் விஜய்யின் உதவியாளர் விஜய்யை தற்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டாராம். ஆனால் நெப்போலியன் அதையும் மீறி உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

அப்போது வெளியே சத்தம் கேட்க விஜய் கோபமாக வெளியே வந்து நெப்போலியனிடம் விஜய் கோபப்பட்டுள்ளார். அன்று மன வருத்தமடைந்த நெப்போலியன் அதன்பின் விஜய்யுடன் மட்டும் படம் எதுவும் நடிக்கமாட்டேன் என முடிவெடுத்துவிட்டாராம்.

இதையும் வாசிங்க:முருகதாஸ் படத்தில் விஜய் பட வில்லன்!. அவர்கிட்ட அடி தாங்குவாரா நம்ம எஸ்.கே?!..

google news
Continue Reading

More in Cinema History

To Top