போனி கபூரை வைச்சி செய்யும் நெட்டிசன்கள்.! அப்டி ஒரு உருட்டு.! இப்போ இப்டி ஒரு உருட்டு.!
ஒரு படத்தின் வெற்றியை தற்போதெல்லாம் எளிதில் கணக்கிட முடிகிறது. அது வசூலிலுளோ, அல்லது அது எத்தனை தியேட்டரில் எத்தனை நாள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறதோ எனபதை வைத்து அல்ல. அதனை தயாரிப்பாளரே சொல்லாமல் சொல்லிவிடுவார்.
அதாவது படத்திற்கு கூட்டம் வருகிறது, படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது என்றால், படம் ரிலீஸ் ஆகும் வரை ப்ரோமோஷனில் ஈடுபட்ட தயாரிப்பாளர் படம் ரிலீசுக்கு பிறகு அதனை ரசிகர்களிடம் விட்டுவிடுவார். அவர்களே அதனை ப்ரொமோட் செய்து விடுவர்.
ஆனால், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், அடுத்த சில நாட்களில் தயாரிப்பாளரே படத்தின் வசூல் இவ்வளவு, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி, உங்கள் டிக்கெட்டை புக் செய்யுங்கள் என்பது பல பதிவிட்டு விடுவார்கள்.
இதையும் படியுங்களேன் - இதுக்கெல்லாமா ஜோசியம் பாக்குறாரு அஜித்.!? ரசிகர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சார்.!
அப்படி தான் போனி கபூர் , படம் ரிலீஸ் ஆன நாள் வரையில், இந்தியாவின் மிக பெரிய ஆக்சன் திரைப்படம் என புகழ்ந்து வந்தவர், அதன் பிறகு, படத்திற்கு செண்டிமெண்ட் ஓவராக இருக்கிறது. படம் நீளமாக இருக்கிறது என ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் வரவும்,
உடனே அடுத்தடுத்த நாள் ப்ரோமோஷனில் போனி கபூர், பக்கா குடும்ப திரைப்படம் என விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார். படம் சரியான ரிப்போர்ட் வரவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் சொல்லும் கடைசி ஆயுதம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி. அதனை போனியும் கடைபிடித்துவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.