இன்டர்வ்யூவா? ஆள விடுங்க சாமி?... நேர்காணலில் இருந்து லாவகமாக எஸ்கேப் ஆன விஜய்…
விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜின் “லியோ” திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், அதனை தொடர்ந்து தனது 68 ஆவது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்க்கிறார். இந்த நிலையில் ஒருவர் நேர்காணலுக்கு அழைத்தபோது விஜய் லாவகமாக எஸ்கேப் ஆகியிருக்கிறார். அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜெயா தொலைக்காட்சியில் ஹரிகிரி அஸ்ஸெம்ப்ளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் பாஸ்கி. இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தனது ஹரி கிரி அஸெம்ப்ளி நிகழ்ச்சியில் பல பிரபலங்களை அழைத்து காமெடியாக பேட்டி எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இருந்தாலும் இவர் பலரையும் கலாய்ப்பதால் ஒரு பக்கம் இவருக்கு எதிர்ப்புகளும் வந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பாஸ்கி, “யூத்” திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்தான சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். “யூத்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பாஸ்கியை பார்த்த விஜய், “எனது தாயார் உங்களது நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகை” என்று கூறினாராம்.
இதனை தொடர்ந்து பாஸ்கி விஜய்யிடம், “நீங்களும் இன்டெர்வ்யூக்கு வரலாமே” என்று கேட்டாராம். அதற்கு விஜய், “ஏங்க, நான் நார்மலான இன்டர்வ்யூக்கு வர்ரவே தயங்குவேன். இதுல காமெடி இன்டர்வ்யூக்கு கூப்புடுறீங்களே?” என்று கூறி வர மறுத்துவிட்டாராம். மேலும் அப்பேட்டியில் பேசிய பாஸ்கி, “விஜய் ஒரு சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான்கு முக்கிய இயக்குனர்களிடம் வாய்ப்பை இழந்த நடிகர்.. இல்லன்னா அவர் லெவலே வேற!..