இளையராஜா தன் பாடல்களுக்கு ராயல்டி கேட்டதும், ரஜினி நடித்த கூலி படத்தில் தன் இசை என்று வழக்கு தொடுத்ததும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து இடையில் தலையிட்டு இசையைப் போல எனது கவிதைக்கும் உரிமை வேண்டும் என்கிறார்.
இந்தப் பிரச்சனையில் தலையிட்ட கங்கை அமரன் வைரமுத்துவை வளர்த்துவிட்டதே நாங்க தான் என்றும் சொன்னார். இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் இவ்வாறு தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… கமலுக்கு பிடிக்காத 3 வார்த்தை!. சொன்னா செம கடுப்பாயிடுவாரு!.. பிரபலம் சொன்ன தகவல்!..
வைரமுத்துவை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார். இளையராஜா அல்ல. கங்கை அமரன் நாங்க வளர்த்து விட்ட ஆளு தான் வைரமுத்து என்று சொல்லி இருக்கிறார். அவர் வைரமுத்து விஸ்வாசமா இருக்கணும்னு சொல்லி இருக்கிறார். வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்கியவர் இளையராஜா. அதற்காக இளையராஜாவுக்கு வைரமுத்து அடிமையா இருக்கணுமான்னா அதுவும் இல்லை.
பஞ்சு அருணாச்சலம் துணிந்து இளையராஜாவை களத்தில் இறக்கி விட்டார். ஆனால் அவருக்கு இளையராஜா விஸ்வாசமாக இருந்து அவரைப் போற்றுகிறாரா என்றால் அதுவும் இல்லை. பஞ்சு அருணாச்சலம் திறமையான தயாரிப்பாளர். சிறந்த பாடலாசிரியர், கதாசிரியர்.
நடிகர் திலகம் சிவாஜியை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் வேலூரில் உள்ள குடியாத்தத்தில் இருந்தாராம். வருஷா வருஷம் சிவாஜி பிறந்தநாளன்று குடியாத்தம் சென்று ஆசிர்வாதம் வாங்கி வருவாராம். அவர் மறைவிற்குப் பின் பிரபுவும் செல்வாராம்.
அப்படி நன்றி, விஸ்வாசம் என்றால் என்ன என்று தெரிந்த கலைஞர்கள் இருக்காங்க. இவங்களுக்கு மத்தியில வைரமுத்து, இளையராஜா இருவருமே லாயக்கற்றவர்கள். வைரமுத்து ஒரு அளவு சாப்பாடு. இளையராஜா எடுப்பு சாப்பாடு. அதனால் இளையராஜாவிடம் வைரமுத்து போட்டி போடவே முடியாது. எந்த கவிஞனாலும் இசை அமைப்பாளனை மிஞ்சி விட முடியாது.
இதையும் படிங்க… விஜய் சேதுபதி அப்பவே மகா புத்திசாலி… சர்டிபிகேட் கொடுத்த பிரபல நடிகர்…
இளையராஜா ராயல்டி கேட்பது கோடி கோடியா சம்பாதித்து விட்டு ஏன் இப்படி பேராசை பிடிச்சி அலையறாருன்னு கேள்வி எழுது. ஆனால் இன்னொரு பக்கம் இதுல வர்ற பணத்தை எல்லாம் நலிந்த இசைக்கலைஞர்களுக்கு செலவு செய்கிறாராம். ஆனால் அவரது செயல்பாடும், பேச்சும், நடந்து கொள்ளும் முறையும் தப்பா இருக்கு.
இளையராஜா தற்போதுள்ள சூழலில் வயதாகி மனநிலை பாதிப்புக்கு ஆளாகிவிட்டார். அவர் டார்ச்சர் பண்ணிக்கிட்டுத் தான் இருப்பார். அதைப் பொறுத்துக்கணும். வேற வழியில்ல. கங்கை அமரன் வந்து துணைக்கு வந்த சொந்தக்கார தாத்தா மாதிரி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…