அல்லக்கைகள் செய்த அட்டூழியங்கள்! மக்களின் கோபத்தை சம்பாதித்த விஜய், நயன்தாரா

Published on: December 12, 2023
nayan
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை தன் தலைவனாகவே ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். எப்படியும் ரஜினி அரசியலுக்கு வந்து விடுவார் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இப்போது ரஜினி வழியில் விஜய் வருகிறார். தனது மக்கள் இயக்கம் சார்பாக பல நல்ல உதவிகளை செய்து கொண்டு வரும் விஜய் மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டம் போன்ற பல செயல்களை செய்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: சூர்யா43 இந்த பிரச்னையை தான் சொல்ல போகுதா.. அப்போ தமிழ் ரசிகர்கள் கொண்டாடிடுவாங்களே..!

இந்த நிலையில் தனது இயக்கம் சார்பாக சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதுவே இப்பொழுது விஜய்க்கு எதிராக திரும்பியிருக்கிறது.

இது விஜய்க்கு தெரிந்து நடந்ததா இல்லை தெரியாமல் நடந்ததா? என தெரியவில்லை. ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கிய அவரது இயக்க நண்பர்கள் கூடவே விஜயின் புகைப்படத்தையும் கையில் வைத்துக் கொண்டே உணவை பரிமாறினர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு நான் இதை செய்வது பிடிக்காது… அவரு பேச்சையும் கேட்கலையா.. பயில்வான் சொன்ன சுவாரஸ்யம்..!

அதை பார்க்கும் போது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவி செய்வது என்பது சரிதான். ஆனால் அதிலேயும் ஒரு விளம்பரமா? என்று திட்டித்தீர்த்தனர். அதே போல் விஜயின் இடது வலது கையாக செயல்படும் புஸ்ஸீ ஆனந்த் குப்பையை அகற்றுகிறேன் என்ற பேர் வழியில் இருந்த குப்பையை எடுத்து அதே இடத்திலேயே போட்டார்.

இது ஒரு பக்கம் கோபத்தை ஏற்படுத்தினாலும் சிரிப்பையும் வரவழைத்தது. இப்படிப்பட்ட நிர்வாகிகளை வைத்து எப்படிஅரசியலில் தைரியமாக விஜய் களமிறங்குகிறார் என்று கூறினார்கள். இன்னொரு பக்கம் நயனும் பெண்களுக்கான சானிட்டரி நாப்கினை வழங்கினார்.

இதையும் படிங்க: பாட்டு எழுத வந்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி கொடுத்த அதிர்ச்சி.. அதை பாட்டில் காட்டிய கவிஞர்…

அது ஒரு பெரிய வேனில் வந்திறங்கியது. ஆனால் அந்த வேனை சுற்றியும் நயன் போட்டோவை வைத்து விளம்பரம் செய்தனர். அதைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் சிலர் வாங்கிய நாப்கினை கீழே போட்டுவிட்டு சென்றதாக கூறப்பட்டது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.