Connect with us
msv

Cinema News

பாட்டு எழுத வந்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி கொடுத்த அதிர்ச்சி.. அதை பாட்டில் காட்டிய கவிஞர்…

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பெரிய இடத்துப் பெண். இப்படத்தில் சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா,அசோகன்,நாகேஷ் என பலரும் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்து இருப்பார். பாடல்கள் அனைத்தும் எழுதியவர் கண்ணதாசன். மேலும் இப்படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கி இருப்பார். இப்படத்தில் பாடல்கள் உருவாகும் பொழுது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்துள்ளார். அதே நேரத்தில் கண்ணதாசன் முழு நேர அரசியல்வாதியாகவும் இருந்து வந்தார். பொதுவாகவே கண்ணதாசன் தாமதமாக தான் பாட்டு எழுத வருவார். ஆனால் இந்த முறை எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசனிடம்,” அண்ணா ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு படம் பண்ண போறோம். அதில் வரும் அனைத்து பாடல்களையும் நீங்கதான் எழுத போறீங்க. அதனால கொஞ்சம் சீக்கிரமா வந்துருங்க” என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் வழக்கமாக தாமதமாகவே வரும் கண்ணதாசன் அன்று அதிகாலை ஐந்து மணிக்கே விஸ்வநாதன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து விட்டார். வந்தவுடன் கண்ணதாசனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அங்கு வாத்தியக் குழு மட்டுமே இருந்தது. எம் எஸ் விஸ்வநாதன் இன்னும் அங்கு வராமல் இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த இயக்குனர் ராமண்ணாவும் கண்ணதாசனும் எம்.எஸ் விஸ்வநாதன் வீட்டிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர். அங்கு அவருடைய உதவியாளர் தொலைபேசியை எடுத்து,” ஐயா இரவு இரண்டு மணி வரைக்கும் படத்திற்கு பின்னணி இசை அமைத்து உடல் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்கிறார். இப்போது நான் எழுப்பினால் அவர் என்னை திட்டுவார்”. என்று சொல்கிறார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணதாசன் எம்.எஸ்.வியை தொடர்பு கொண்டபோது மறுபடியும் அதே பதில் தான் வந்தது. இப்போதைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இங்கு வந்து இசையமைக்கப் போவதில்லை. என்று விஸ்வநாதன்மேல் கோபம் கொண்டார் கண்ணதாசன். உடனே அங்கிருந்த இயக்குனர் ராமண்ணா,” அண்ணா நீங்க கோபம் அடையாதீர்கள். நான் பாடலுக்கான சூழ்நிலையை சொல்கிறேன். நீங்கள் அதற்கு வரிகள் எழுதி தாருங்கள். எம்.எஸ்.வி வந்தவுடன் இசையமைத்துக் கொள்ளலாம்”என்று சொல்லுகிறார்.

கதாநாயகன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறான். இதற்கெல்லாம் காரணம் அந்த இறைவன் தான். என்று சூழ்நிலையை விவரித்து சொல்கிறார். உடனே கண்ணதாசன் இந்த சூழ்நிலைக்கு பாடல் எழுத சிந்தித்து கொண்டு இருக்கிறார். அப்பொழுது கதாநாயகன் இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம் இறைவன் தான் என்பது போல பாட்டு எழுத என்னை சீக்கிரமாக அழைத்து எம்.எஸ்.வி அங்கு தூங்கி என்னை இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி விட்டார். இந்த இரண்டு சூழ்நிலையும் ஒரே மாதிரி இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒரு பாடலை எழுத ஆரம்பிக்கிறார்.

பின்னர் எழுதி முடித்தவுடன் அதை இயக்குனரிடம் கொடுத்துவிட்டு எனக்கு வேலை இருக்கிறது. இதை விஸ்வநாதனிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி கிளம்பிவிட்டார். பின்னர் விஷயம் கேள்விப்பட்டு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இயக்குனர் ராமண்ணா நடந்ததை விவரித்தார். பின்னர் பாடலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து போனார். இயக்குனரிடம் என்னங்க இப்படி எழுதி கொடுத்துட்டு போயிட்டாரே .

என்று கேட்கையில் அவர் உங்கள் இருவருக்கும் இன்று காலையில் நடந்ததை அவர் எழுதி இருக்கிறார். மேலும் இது படத்தின் சூழ்நிலைக்கு ஏற்பதாகவும் உள்ளது. எனக்கு இதுதான் வேண்டும் இதற்கு இசையமையுங்கள் என்று கூறினார். பின்னர் அந்த பாடல் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்தது. அது என்னவென்றால் ”அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா.. ”இவ்வாறு அந்த பாடல் உருவான தகவல் வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top