ஒரு வாரத்தைக் கடந்தும் வசூலை வாரிக் குவிக்கும் டிராகன்… 8வது நாள் வசூலைப் பாருங்க

Published on: March 18, 2025
---Advertisement---

சின்ன பட்ஜெட் படங்களுக்கு இப்போது தனி மவுசு. அவர்களின் பலமே கதைக்களம்தான். அப்படித்தான் இந்த ஆண்டில் மதகஜராஜாவும், டிராகனும் சக்கை போடு போட்டுள்ளது. இவற்றில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. ஒரு வாரத்தைக் கடந்தும் அசராமல் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

லவ் டுடே படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். இப்போது வெளியாகி உள்ள டிராகன் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு சூப்பரோ சூப்பர். கிட்டத்தட்ட ஆரம்ப காலகட்டத்தில் உள்ள தனுஷின் சாயலில் தான் இருக்கிறார்.

பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மெசேஜைச் சொன்னது இந்தப் படம். அதனால்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிராகன் படம் இப்படி ஒரு வசூலை செய்யும் என யாரும் எதிர்பார்க்கல. படத்தின் திரைக்கதை அம்சம்தான் அதற்குக் காரணம். இளம் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து படம் இயக்கியுள்ளார்.. அதனால்தான் வசூல் வேட்டையாடுகிறது.

குறுக்கு வழியில் போனால் வாழ்வில் எளிதில் முன்னேறி விடலாம் என்றே பலரும் நினைப்பார்கள். அதனால் அவர்கள் பாதையிலேயே பயணம் செய்கிறான் ஹீரோ. ஆனால் கடைசியில் ஜெயிப்பது நேர்மைதான் என்பதையே படம் தோலுரித்துக் காட்டுகிறது. அரியர்ஸ் போட்டு படிப்பது மாஸ் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறான் ஹீரோ.

அதற்கு பதிலாக என்னென்ன தண்டனைகள் கிடைக்கிறது? அதே நேரம் எப்படி எப்படி கஷ்டப்படுகிறான்? என்னென்ன வேலைகள் எல்லாம் செய்கிறான்? நேர்வழியில் பயணித்தால்; அரியர்ஸ் போடலைன்னா எப்படி முன்னேறி இருக்கலாம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.

இந்தப் படத்தில் நடக்கும் சில சம்பவங்கள் நமது வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் ஒட்டுகிறது. இதுதான் ரசிகர்களைக் கவரக் காரணம். இந்தப்படத்தின் 1 வார வசூல் என்னன்னு பார்க்கலாமா…

8 வது நாள் வசூல்: இந்திய அளவில் முதல்நாளில் 6.5கோடி, 2வது நாள் 10.8கோடி, 3வது நாள் 12.75கோடி, 4வது நாள் 5.8கோடி, 5வது நாள் 5.1 கோடி, 6வது நாள் 5.2 கோடி, 7வது நாள் 477 கோடி. ஆக மொத்தம் 50.15கோடி. 8வது நாள் வசூல் 4 கோடியைச் சேர்த்து மொத்தம் 54.15 கோடி.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment