Kubera collection: தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் குபேரா. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியானபோதே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் தனுஷின் தோற்றம்தான் . அதன்பின்னரே அவர் இந்த படத்தில் பிச்சைக்காரராக நடிப்பது தெரியவந்தது.
அதோடு இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிப்பது தெரியவந்தது. மும்பை பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. தன்னுடைய பல லட்சம் கோடி கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்காக ஒரு கார்ப்பரேட் முதலாளி போடும் திட்டத்தில் நாகார்ஜுனாவும், தனுஷும் எப்படி சிக்குகிறார்கள்?. கடைசியில் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.
இன்னும் சொல்லப்போனால் குபேரன் ஒரு சீரியஸ் சினிமா. தெலுங்கு படங்களில் வழக்கமாக வரும் கமர்ஷியல், மசாலா எதுவும் இதில் இல்லை. நாகார்ஜுனாவோ, தனுஷோ இந்த படத்தில் பாலையா போல பன்ச் வசனம் பேசவில்லை. ஆனாலும், தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துவிட்டது. தமிழ்நாட்டில் தனுஷுக்காக முதல் 3 நாட்கள் ஓடினாலும் அதன்பின் வசூல் படுத்துவிட்டது. அதேபோல், ஹிந்தியிலும் பெரிய வசூல் இல்லை. தெலுங்கில் மட்டும் தொடர்ந்து இரண்டு டிஜிட்டில் வசூல் வருவதாக நேற்று செய்திகள் வெளியானது.
தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரால் மட்டுமே இதுபோன்ற வேடங்களில் நடிக்க முடியும் என இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் சிரஞ்சீவி பேசினார். அதோடு, தனுஷுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். இல்லையெனில் தேசிய விருதுக்கே அர்த்தமில்லை எனவும் அவர் பேசினார். ஆனால், புளூசட்ட மாறன் போன்றவர்கள் ‘படத்திற்கு வசூலே இல்லை. படம் வெளியான 2 நாளில் சக்சஸ் மீட் கொண்டாடி ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள்’ எனவும் சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில், குபேரா படம் வெளியாகி 5 நாட்களில் இந்தியா மட்டும் வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்து 60 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் 3 நாட்கள் வசூல் இருந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் வசூல் மொத்தமாக குறைந்துவிட்டது. 5வது நாளான நேற்று 5.50 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்களாகியும் இப்படம் 100 கோடியை கூட வசூல் செய்யவில்லை. ஆனால், படக்குழுவோ சக்சஸ் மீட் கொண்டாடிவிட்டார்கள்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…