Categories: latest news

ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேம்லி படங்களின் 10 நாள் வசூல்… ரெண்டுல பெஸ்ட் இதுதான்!

தமிழ்த்திரை உலகில் சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதை அம்சத்துடன் இருக்கும்பட்சத்தில் வெற்றி வாகை சூடுகின்றன. இது இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே நிரூபித்து வருகின்றன. குடும்பஸ்தன், டிராகன் படங்களைத் தொடர்;ந்து தற்போது டூரிஸ்ட் ஃபேம்லி படமும் சக்கை போடு போட்டு வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்களில் வெறும் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் மசாலா மட்டும் கலந்து வருவதால் ரசிகர்களுக்கு அதன் திரைக்கதை நல்லா இருந்தால் மட்டுமே பிடிக்கிறது. கதை சவ்வு மாதிரி இழு இழுன்னு இழுத்தால் அதை புறம் தள்ளி விடுகிறார். ரெட்ரோ படத்தின் நீளம் அதிகம். படத்தின் தேவையில்லாத காட்சிகளை சுருக்கி டிரிம் பண்ணி இருந்தால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இருந்தாலும் சூர்யாவுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தியேட்ரிக்கல் ஹிட் என்று எதுவும் இல்லாத பட்சத்தில் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு ஆறுதல் அளிக்கிறது. இந்தப் படம் உலகளவில் 104 கோடியை கிராஸ் பண்ணியுள்ளதாக 2 டி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் படத்தின் சக்சஸ் மீட்டில் சூர்யா லாபத்தில் 10 கோடியை எடுத்து அகரம் கல்வி அறக்கட்டளைக்குக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேம்லி படங்களின் 10 நாள் வசூல் எவ்வளவுன்னு பார்க்கலாமா…

இந்திய அளவில் ரெட்ரோ படத்தின் 10வது நாள் வசூல் 1.25 கோடி. மொத்த வசூல் 55.25 கோடி. டூரிஸ்ட் ஃபேம்லி படத்தின் 10வது நாள் வசூல் 4.75 கோடி. இது முதல் நாளில் இருந்து 9 நாள்களாக இல்லாத வசூல். அந்த வகையில் 10வது நாள் வசூல்தான் அதிகம். இந்தப் படத்தின் 10 நாள்கள் செய்த மொத்த வசூல் 28 கோடி. இந்த இரு படங்களில் ரெட்ரோ படத்தைக் காட்டிலும் விமர்சகர்கள் டூரிஸ்ட் ஃபேம்லி படத்தைத் தான் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

57 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

1 hour ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago