கேம் ஓவர்.... விடாமுயற்சி படத்தின் 5வது நாள் வசூல் இவ்ளோதான்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
கல்லா களை கட்டியது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியானது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2023 பொங்கலுக்கு துணிவு வந்தது. அதன்பிறகு வந்த அஜீத் படம் என்றதும் முதல் நாளில் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் பார்த்தனர்.
அதனால் கொஞ்சம் கல்லா களை கட்டியது. அடுத்தடுத்த நாள்களில் படத்தின் வீரியம் இவ்ளோதான் என்று உணர்ந்த ரசிகர்கள் கூட்டம் கணிசமாகக் குறைய ஆரம்பித்தது. அதனால் களை இழந்த விடாமுயற்சி மெது மெதுவாக பிக்கப் ஆகுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
அஜர்பைஜான்: படத்தில் முதல் 20 நிமிடங்கள் போர். செகண்ட் ஆப் தான் சுமாராகப் போகிறது. நிறைய பிளாஷ்பேக் தேவையில்லாமல் வருகிறது. அஜீத் அஞ்சாறு கெட்டப்ல வந்தாலும் ஒன்றுதான் நல்லாருக்கு. பைட் சரியில்லை. அஜீத் அடிவாங்குறாரு. அஜர்பைஜான் தேவையில்லை. அங்கு போய் ஏன் சூட்டிங் எடுத்தாங்கன்னு பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு: தமிழகத்தில் மட்டும் 61 கோடிக்கு மேல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் மட்டும் 25 கோடி வசூலித்துள்ளது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் படம் இல்லை. அதுவும் சாதாரணமான வேலை நாளில் வெளியான படம். அப்படி இருந்தும் இவ்வளவு ரசிகர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் வந்துள்ளதாகவே தெரிகிறது. படத்தைப் பொருத்தவரை நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தவண்ணம் உள்ளன. அதே நேரம் கலவையான விமர்சனங்களும் வருகின்றன.
மொத்த வசூல்: விடாமுயற்சி படத்தின் முதல் நாள் 26 கோடியும், 2வது நாள் 10.25 கோடியும், 3வது நாள் 13.5கோடியும், நான்காவது நாள் 12.5 கோடியும் வசூலித்துள்ளது. 5வது நாளில் 3 கோடியும் என மொத்த வசூல் இந்திய அளவில் 65.25 கோடியாகவே உள்ளது.