கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரியும் வகையில் எளிய தமிழில் இவரது பாடல்கள் இருக்கும்.
இவர் சிங்காரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராய் அறிமுகமானார். பின் ஆயிரத்தில் ஒருவன், தாய் சொல்லை தட்டாதே போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்களில் ஒரு உயிரோட்டமும் இருக்கும்.
இதையும் வாசிங்க:அழுது புலம்பிய மீனாவுக்கு சரியான அட்வைஸ் கொடுத்த அம்மா..! ஸ்ருதி ஆசையை கெடுத்த ரவி..!
ஒரு காலத்தில் அனைத்து இயக்குனர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட கவிஞரும் கூட. இவர் ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அதற்குபின் இவர் கடவுள் மீது நம்பிகை உடையவராக மாறிவிட்டார். இவர் மிகவும் பிஸியாக இருந்த காலகட்டத்தில் இவரிடம் தேடி வந்த வாய்ப்புதான் கர்ணன் திரைப்படத்தில் பாடல்களை எழுதும் வாய்ப்பு. கர்ணன் திரைப்படத்தினை இயக்குனர் பி.ஆர்.பந்துலு இயக்கினார். இப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்ரி, அசோகன். முத்துராமன் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
அந்த காலத்தில் நடைபெற்ற மகாபாரத கதையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இப்படம். இப்படத்தின் கதைக்கு மற்றொரு வடிவம் சேர்த்தவர் சிவாஜி கணேசன். மேலும் இப்படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன்தான் எழுதியுள்ளார்.
இதையும் வாசிங்க:ரஜினி அழைத்தும் கமல் அனுமதியில்லாமல் வர மறுத்த பிரபலம்! தலைவருக்கே தண்ணி காட்டியவர் யார் தெரியுமா?
ஆனால் இப்பாடலை எழுத சொல்லும் போது இப்படத்தின் இயக்குனரான பந்துலு கண்ணதாசனின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார். கடவுள் இல்லை என நம்பும் இவர் எப்படி பாடல் எழுதுவார் எனும் எண்ணத்தில் இருந்துள்ளார். மேலும் கண்ணதாசன் கீதையை முழுவதுமாக படித்துள்ளாரா என பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இதையெல்லாம் கேள்விபட்ட கண்ணதாசன் ஒன்றரை நாளிலையே இப்படத்தின் பாடல்கள அனைத்தையும் எழுதியுள்ளார்.
மேலும் இப்படத்தில் இருந்த உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை இசையமைத்து முடிந்தபின் பந்துலு கேட்டுள்ளார். அப்போது அவர் கண்களில் அவரே அறியாமல் கண்ணீர் வந்துள்ளாதாம். பின் இவர் தந்து மனதார கண்ணதாசனை பாராட்டினாராம்.
இதையும் வாசிங்க:போதும்டா சாமி! இனிமே இப்படி நடிக்கவே மாட்டேன் – ஹீரோயின்களை பார்த்து தலை தெறிக்க ஓடிய விஷால்
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…