4 வருடங்களில் உயர்ந்த கமலின் சொத்து மதிப்பு!. அட இவ்வளவு கோடியா?!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kamalhaasan: நடிகர் கமல் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கினார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றி அரசியலில் அவருக்கு கிடைக்கவில்லை. அப்போது திமுகவை திட்டி வந்தவர் இப்போது அதனுடன் இணக்கமாக செயல்பட துவங்கிவிட்டார்.

இப்போது கமலுக்கு எம்.பி. பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் 4 வருடங்கள் கமல் சினிமாவில் நடிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவது, விளம்பரங்களில் நடிப்பது, அரசியலில் ஈடுபடுவது என சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

Also Read

இந்தியன் 2 எனது கடைசிப்படமாக இருக்கும் எனவும் அறிவித்தார். ஆனால், இந்தியன் 2 திட்டமிட்டபடி எடுக்கப்படவில்லை. அரசியலில் வெற்றி இல்லை என ஆனபின் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது. விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது.

அந்த படத்திற்கு பின் இந்தியன் 2 வெளியானது. ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படம் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. நெகட்டிவ் விமர்சனங்களால் பல தியேட்டர்கள் காத்து வாங்குகிறது.

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்பவர் கமல். இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியும் கமல்ஹாசன் வேட்புமனுவுடன் தனது சொத்து மதிப்பை தாக்கல் செய்திருக்கிறார். அதில், தனது சொத்து மதிப்பு 305 கோடி என பதிவிட்டிருக்கிறார்.

கடந்த 2021 கோவை சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு 176 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, கடந்த 4 வருடங்களில் கமலின் சொத்து மதிப்பு 129 கோடி அதிகரித்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கமல் விக்ரம், இந்தியன் 2, கல்கி, தக் லைப் ஆகிய 4 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கும் என கணிக்கப்படுகிறது.

Leave a Comment