Thug Life: சினிமாக்களுக்கு எதிர்ப்பு என்பது கடந்த 20 வருடங்களில் அதிகரித்திருக்கிறது. ஒரு இயக்குனர் ஒரு சர்ச்சையான விஷயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கினால் அதை விரும்பாத ஒரு கூட்டம் படத்தை எதிர்க்கும். டிரெய்லரில் ஒரு காட்சியை பார்த்து கோபமடைந்தால் இந்த காட்சியை நீக்க வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பும். சில கூட்டங்கள் தலைப்புக்காவே பிரச்சனை செய்வர்கள்.
பெரும்பாலும் இதை வைத்து சில அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள். அவர்களின் பிழைப்பு ஓடுவதற்காக சினிமாவை குறி வைத்தே எப்போதும் கருத்து சொல்வார்கள். இது எல்லாவற்றையும் கமல் சந்தித்திருக்கிறார். விஸ்வரூபம் படம் எடுத்தபோது படத்தை பார்க்காமலேயே ஒரு குரூப் கமல் முஸ்லீம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறார் என கிளம்பியது.
கமல் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த அரசும் கமலுக்கு எதிராக நின்றது. எனவே, படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டு கமல் ‘நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என சொன்னார். அதன்பின் அப்பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் வெளியானது.
அதேபோல், கமல் சண்டியர் படம் எடுத்தபோது கமல் சாதி பிரச்சனையை ஏற்படுத்துகிறார் என சொல்லி ஒரு குரூப் கிளம்பியது. இதனால், ஸ்டுடியோவுக்குள் படத்தை எடுக்கும் நிலைக்கு கமல் தள்ளப்பட்டார். மேலும், தலைப்பை மாற்ற வேண்டும் என ஒரு குரூப் கிளம்பியது. எனவே, கமல் அப்படத்திற்கு விருமாண்டி என தலைப்பு வைத்தார்.
இப்போது அவரின் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. ஏற்கனவே, கன்னட மொழி பற்றி அவர் பேசியதால் கர்நாடகாவில் படம் வெளியாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தக் லைப் என்கிற தலைப்பை மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தக் லைப் என்பது பொறுக்கிகள், மூர்க்கர்கள், போக்கிரிகளை குறிக்கும் சொல். Thugs மற்றும் Pindaris என்பவர்கள் இந்தியாவை அச்சுறுத்திய வழிப்பறி கொள்ளையர்கள் கூட்டம், அவர்களுக்கு நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ கிடையாது. எனவே படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். கமலின் சண்டியர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவரும் இவர்தான். இவரால்தான் அப்படத்திற்கு விருமாண்டி என தலைப்பு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக் லைப் படத்திற்கு தொடர்ந்து வரும் ஏழரைகளை கமல் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…