பராசக்தி படத்தில் பாகுபலி வில்லன்!. அதுபோக இன்னும் 2 நடிகர்கள்!.. ஒன்னுமே புரியலயே!….

Published on: August 8, 2025
---Advertisement---

Parasakthi movie: சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க புறநானூறு என்கிற படம் துவங்கப்படது. 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது. சூர்யா சமீபத்தில் மும்பையில் செட்டிலானார். மேலும், அவரை ஹிந்தி படங்களிலும் நடிக்க வைக்கும் முயற்சிகளை அவரின் மனைவி ஜோதிகா எடுத்து வருகிறார்.

எனவே, இந்த நேரத்தில் இப்படி ஒரு கதையில் நடித்தால் பாலிவுட்டில் தனக்கு எதிர்ப்பு வரும் என யோசித்த சூர்யா படத்தின் கதையில் சில மாற்றங்களை சொன்னார். ஆனால், அதற்கு சுதாகொங்கரா சம்மதிக்கவில்லை. எனவே, அந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட புறநானூறு டிராப் ஆனது. அந்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்ட பராசக்தி துவங்கப்பட்டது.

இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும், இலங்கையில் சில நாட்களும் நடந்தது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த மதராஸி படத்தில் சில நாட்கள் நடிக்க வேண்டியிருந்ததாலும், பராசக்தி பட தயாரிப்பாளர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதாலும் பராசக்தி படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது மதராஸி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் பராசக்தி படத்தின் ஷூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பராசக்தி ஷுட்டிங் நடக்கும் இடத்தில் பாகுபலி நடிகர் ராணா இருப்பது தொடர்பான புகைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது அதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது.

இந்த படத்தில் கேமியோ வேடத்தில் ராணா நடித்திருக்கிறார். அதேபோல், மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் ஃபாசில் ஜோசப் மற்றும் கன்னட நடிகர் தனஞ்ஜெய் ஆகியோரும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்களாம். அதாவது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது அது ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவிலும் எதிரொலித்தது.

எனவே, அது தொடர்பான காட்சிகளைத்தான் ராணா, ஃபாசில் ஜோசப் மற்றும் தனஞ்செய் ஆகியோரை வைத்து எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது பராசக்தி படமும் பல மொழிகளிலும் வெளியாகும் ஒரு பேன் இண்டியா படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment