Connect with us

தொடந்து வரும் 3 தெறி அப்டேட்டுகள்!. ஜூன் மாசம் முழுக்க கொண்டாட்டம்தான்!..

latest news

தொடந்து வரும் 3 தெறி அப்டேட்டுகள்!. ஜூன் மாசம் முழுக்க கொண்டாட்டம்தான்!..

Jailer 2: முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும். ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் ஒன்றாக வெளியாகி போட்டி போடும். ஆனால், இப்போதெல்லாம் ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்கள் தொடர்ந்து நடிப்பதே இல்லை. கமலே 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து அதன்பின் விக்ரம் படத்தில் நடித்தார். விஜய்க்கோ வருடம் ஒரு படம் வெளியானது. அஜித்தெல்லாம் 2 வருடங்களுக்கு ஒரு படம் என மாறிவிட்டார்.

விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிப்பாரா என தெரியவில்லை. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இதுதான் தன்னுடைய கடைசிப்படம் என விஜய் சொல்லிவிட்டாலும் 2026 தேர்தலுக்கு பின் அவர் மீண்டும் நடிப்பார் என சிலர் சொல்கிறார்கள்.

விஜயின் ஜனநாயகன், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2, லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி போன்றவை ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார்.

தனுஷ் ஒருபக்கம் இட்லி கடை படத்தை முடித்துவிட்டு குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்பான முக்கிய அப்டேட்டுகள் இந்த மாதம் தொடர்ந்து வரவிருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தின் டீசர் வீடியோ வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல், நெல்சனின் பிறந்தநாளான ஜூன் 21ம் தேதி ஜெயிலர் 2 பற்றிய அப்டேட் வெளியாகவுள்ளது. அடுத்து ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அன்று ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது. இப்படி 3 தொடர் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top