---Advertisement---

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

Published on: April 1, 2026
yogibabu
---Advertisement---

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை. சந்தானமும், சூரியும் இனிமே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அந்த பக்கம் போய் விட்டார்கள்.. எனவே, கோலிவுட்டில் காமெடிக்கு பஞ்சம் நிலவுகிறது. இதன் காரணமாக காமெடிக்கு யோகி பாபு என்றாகிவிட்டது..

இதை பயன்படுத்திக் கொண்டு அவரும் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து கல்லாகட்டி வருகிறார். அவர் நடிக்கும் படங்களில் காமெடி நன்றாக இருக்கிறதோ இல்லையோ அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது..

இந்நிலையில்தன், அவரைப் பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. தனது மேனேஜர்களுக்கு சம்பளமே கொடுக்காமல் இழுத்துடிக்கிறாராம்.. சம்பளத்தை கேட்டால் உடனே அவர்களை வேலையை விட்டு தூக்கி விட்டு புது மேனேஜரை நியமித்து விடுகிறாராம். இப்படி இதுவரை 20க்கும் மேற்பட்ட மேனேஜர்களை அவர் மாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது..

அதேபோல், தான் நடிக்கும் காட்சியில் தன்னுடன் நடிக்கும் நடிகர் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களை அந்த இடத்திலேயே எல்லோர் முன்னிலையிலும் திட்டுகிறாராம் யோகி பாபு. ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் குட ரஜினியுடன் நடித்தபோது இதே மாதிரி ஒரு நடிகரை யோகிபாபு திட்டியிருக்கிறார்.. ஆனால் ரஜினி இதை கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ‘
ஏற்கனவே ஒரு பதட்டத்தில் வசனத்தை மறந்த அந்த நடிகர் யோகி பாபு திட்டினால் மீண்டும் எப்படி இயல்பாக நடிப்பார்?’ என கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.