More
Categories: Cinema History Cinema News latest news

அண்ணனுக்கும், தம்பிக்கும் கடும் போட்டி….ஒரே நாளில் ரிலீஸாகும் படங்களுக்கு பலத்த வரவேற்பு

தமிழ்சினிமாவில் செல்வராகவன் படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இவரது இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே ஆகிய படங்கள் மறக்க முடியாதவை. தம்பிக்காக அண்ணன் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது செல்வராகவனுடன் மன்சூர் அலிகான், ராதாரவி, நட்டி, கூல் சுரேஷ் உள்பட பலரும் நடித்த பகாசூரன் படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை வரவழைத்துள்ளது.

Advertising
Advertising

Selvaragavan

சாணி காயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் செல்வராகவனின் நடிப்பு பிரமாதமாக இருந்ததுவும் இந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம்.

அதே போல நடிகர் தனுஷ் படங்களுக்கு தமிழ்சினிமாவில் தனி இடம் உண்டு. இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் கடைசியாக வெளியாகி வெற்றி வாகை சூடியது.

அதனால் இவர் தற்போது நடித்து வெளியாக உள்ள வாத்தி படத்திற்கும் செம மாஸான வரவேற்புடன் எதிர்பார்ப்பு உள்ளது.

இது தவிர ஒரே நாளில் நாளை (17.2.2023) இருவரது படங்களும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கலக்கலான விமர்சனம் வந்தவண்ணம் உள்ளது.

பகாசூரன்

Bagasooran

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாக உள்ள படம் பகாசூரன். நட்டி என்ற நடராஜன், செல்வராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம்.

சமூகத்தில் பெண்களை நாசமாக்கும் சில விஷமிகளைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் இடம்பெற்ற சிவா சிவாயம் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குனர் இதற்கு முன் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாத்தி

Vaathi

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாத்தி. இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்து இருப்பவர் சம்யுக்தா மேனன். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

கல்வி வணிகமயமாவதை மையக்கருவாகக் கொண்டு உருவான படம் வாத்தி. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. படத்தில் கல்வில கிடைக்குற காசு மாதிரி அரசியல்ல கூட கிடைக்காதுன்னு வசனம் வருகிறது.

அதே போல் படத்திற்கு ஆசிரியர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

புதுக்கோட்டை முன்னாள் ஆசிரியரும் முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி இதுபற்றி கூறுகையில், வாத்தி என்ற படத்தின் பெயர் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது என்கிறார்.

Published by
sankaran v

Recent Posts