Cinema History
இதெல்லாம் ஒரு பாட்டா!.. படு கேவலம்!. துரோகம்!. விஜயை காலம் மன்னிக்குமா?!.. பொங்கும் பிரபலம்!..
சமீபத்தில் கோட் படத்தில் வெளியான பர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு சாங் பட்டாசாய் பட்டையைக் கிளப்பினாலும் இவரைப் பற்றிய கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் பிரபலம் ஒருவர். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
கோட் படத்தில் வந்த விசில் போடு பாடலை விஜய் பாடியிருக்கிறார். ஏற்கனவே நான் இறங்கி வர வா என்ற பாடலில் சரக்கடிக்க வகுப்பு எடுத்தார். இந்தப் பாட்டே பார்ட்டில தான் தொடங்குது. சரக்கடிக்கிற பார்ட்டி மாதிரி தான் காட்சியில எடுக்கப்பட்டுருக்குது. அதுல பார் 68 போட்டுருக்கு. சின்ஸ் 1974 வேற போட்டுருக்கு. அப்படின்னா நாம யோசிக்க வேண்டியிருக்கு என்னன்னா பாருக்குள்ள நடக்குற பாட்டு.
ஆனால் நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு… அதெல்லாம் சொல்லாம அரசியல் வேற ஆரம்பிச்சிக்கிட்டு மனசாட்சின்னு ஒண்ணு வேண்டாமா… மக்கள் கோடி கோடியா பணத்தைக் கொடுத்துருக்காங்க. கைய அசைக்கறதுக்கு… காலை அசைக்கிறதுக்கு எல்லாம். அந்த அளவு மக்கள் புகழை கொடுத்துருக்காங்க. அவங்களுக்கு கைமாறா என்ன செய்யலாம்? காலம் விஜயை மதிக்குமா?
அரசியல் கட்சின்னு ஒரு பொருளும் இருக்கு. அரசியல் கட்சி ஆரம்பிக்கிற நேரத்துல அவருக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா? அவரை நம்பி எவ்வளவு பேரு வாராங்க.
இந்தப் பாடலில் கேம்பைன் ஒண்ணுன்னு வரும். ஏ வேண்டாம் வேண்டாம் சேம்பைனா தான் தெறக்கட்டுமான்னு சொன்னேன்கறாரு விஜய். சேம்பைன்னா ஒயின். நான் மைக்கை புடிக்கட்டுமான்னா எல்லாரும் மைக்கைத் தான புடிப்பாங்க. தலைவர் சரக்குப் பாட்டலைப் புடிக்கிறாரு. இதைப் பார்த்தா இளைஞர்கள் என்ன செய்வாங்க…? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?
இதுல கடைசில லாஸ்ட் சொட்டு உள்ளவரை நம்ம பார்ட்டி ஓயாதுங்கறாரு. வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான், குடிமக்கள் தான் என் கூட்டணிங்கறாரு. அப்புறம் பாட்டை முடிக்கிறதுக்கு முன்னாடி மைக்கேல் ஜாக்சன்னா மூன் வாக், மர்லின் பிராண்டோன்னா ஒரு வாக் சொல்றாரு. அப்புறம் ஆட்டம் வேணும்னா கோ வாக். உங்க பாட்டுக்குத் தான் எங்க வாக்கு… இந்தப் பாட்டுக்கு எல்லாம் வாக்கு போட்டோம்னா மக்களை எங்கே கொண்டு போய் நிப்பாட்டுவாங்கன்னு தெரியல. இது உண்மையிலேயே மதன் கார்க்கி எழுதுனது கிடையாது.
யுவன் சங்கர் ராஜாவோட இசை கிடையாது. முழுக்க முழுக்க அவங்களோட பேரைப் பயன்படுத்தி விஜய் அவங்களோட ஆள்களை வச்சி எழுதுனது ரெண்டு மூணு வரியைத் தவிர. இது முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது. இது ஒரு மோசமான பாட்டு. இப்ப தான் தெரியுது. மக்கள் ஏன் எம்ஜிஆரைக் கடவுளாக் கொண்டாடுறாங்கன்னு. அவரோடு பாடல்ல இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதே இல்ல.
காலம் கலிகாலம். இதனால விஜய் இப்படி எல்லாம் பண்றது சமூகத்துக்கு செய்யுற துரோகம். இப்படிப்பட்ட பாடலை நீக்கினா, காலம் அவரை மன்னிக்கும். இயற்கை மன்னிக்கும் என்கிறார் பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி.