அவர்தான் சூப்பர்ஸ்டார்!. விஜயகாந்த் நிகழ்ச்சியில் பற்ற வைத்த கருணாஸ்!.. என்ன ஆகப்போகுதோ!..
மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இது சம்பந்தமாக நடிகர்கள் கலந்து கொண்டதைப் பற்றி பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். பார்க்கலாமா...
இதையும் படிங்க... இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேப்டன் செய்த செயல்.. கண்ணீர் மல்க கூறிய மகன்
இந்தக்கூட்டத்திற்கு பல நடிகர்களும் தவறாமல் வந்து விட்டனர். கமல், ஆர்.கே.செல்வமணி, விஷால், பார்த்திபன், மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார் உள்பட பல நடிகர்களும் வந்தனர். இவர்களில் ஆர்.கே.செல்வமணி கண்டிப்பாக கேப்டனோட பேரை நடிகர் சங்கத்துக்கு வைக்க வேண்டும் என்று சொன்னார். விஷால் என்னை மன்னிச்சிரு சாமி, நான் தப்பு பண்ணிட்டேன் சாமி என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் பையனுடனும் நீங்க விரும்புனீங்கன்னா நானும் உங்கக்கூட நடிக்கிறேன் என்றார். இதை ஏற்கனவே ராகவா லாரன்ஸ் சொல்லி விட்டார். நடிகர் மன்சூர் அலிகான் எப்போதுமே ஏதாவது ஏடாகூடமாக பேசி மாட்டிக் கொள்வார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரொம்பவே தெளிவாகப் பேசி விட்டார். அவர், மொய்விருந்து வைக்கலாம் என ஆலோசனை சொன்னார். அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நடிகர் சங்கக் கட்டடத்தை வலுப்படுத்தலாம் என்றார். கருணாஸ் பேசும்போது ரியல் சூப்பர்ஸ்டார் விஜயகாந்த் தான் என்றார். இந்த நிலையில் விஜய்யும் அந்தப் பட்டத்திற்கு மல்லுகட்டிக் கொண்டு இருக்கிறார். ரஜினியும் விடாமல் அந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.
இப்போது கருணாஸை என்ன பாடு படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர்கள் எல்லோரையும் விட முத்தாய்ப்பாக பேசியவர் ஜெயம் ரவி. இவர், கேப்டன் விஜயகாந்தோட வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் வரணும் என்று பேசி விட்டார். இவர்களைப் பொறுத்தவரை என்ன தெரிகிறது என்றால், ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு விஜயகாந்தைப் புகழ்ந்து பேசி உள்ளனர்.
மேற்கண்ட தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.