4 பேர் அரிவாளுடன் துரத்தினாங்க! படப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த் செய்த முதல் வேலை - நிஜ ஹீரோப்பா

captain
Vijayakanth: தமிழ் சினிமாவில் விஜயகாந்த் எப்பேற்பட்ட ஒரு நடிகராக மிகப்பெரிய புகழுடன் வலம் வந்தார் என அனைவருக்கும் தெரியும்.எம்ஜிஆருக்கு அடுத்த நிலையிலேயே தமிழக மக்கள் விஜயகாந்தை பார்க்க ஆரம்பித்தார்கள். நடிப்பதை மட்டுமே தொழிலாக வைத்துக் கொண்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக மாறினார் கேப்டன்.
விஜயகாந்தை பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் நம்மை வியப்பூட்ட செய்கின்றன.இந்தளவுக்கு இருந்த ஒரு மனிதரை ஏன் சில சமயங்களில் மக்கள் புறக்கணித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. உடல்நிலையில் எந்தவொரு குறையும் இல்லாமல் விஜயகாந்த் மட்டும் நன்றாக இருந்திருந்தால் இன்று தமிழகத்தின் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
இதையும் படிங்க: கேவலம்!.. வெளிநாட்டில் அத்துமீறிய ’அ’ எழுத்து நடிகர்!.. பொண்டாட்டியை பறி கொடுத்து விட்டு கதறும் கணவர்?..
இந்த நிலையில் பிரபல நடிகை சத்யப்ரியா விஜயகாந்தை பற்றி கூறும் போது சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். விஜயகாந்த் தயாரிப்பில் உருவான திரைப்படம் மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சத்யப்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அப்போது படப்பிடிப்பு நாகர்கோயிலில் நடைபெற்றதாம். அந்த நேரம் யாரோ ஒருவரை நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் அரிவாளுடன் அந்த நபரை வெட்டுவதற்காக துரத்திக் கொண்டு வந்தார்களாம். அதை பார்த்த படக்குழுவினருக்கு ஒரே அதிர்ச்சியாம்.
இதையும் படிங்க: ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்களாம். உடனே விஜயகாந்த் படப்பிடிப்பில் இருந்த பெண் நடிகைகளை மட்டும் பத்திரமாக ஒரு வண்டியில் அவசர அவசரமாக ஏற்றி அனுப்பி விட்டாராம். அந்த கும்பலால் பெண் நடிகைகளுக்கு ஏதும் தீங்கு வந்திரக்கூடாது என்பதற்காக கேப்டன் இவ்வாறு செய்தார் என சத்யப்ரியா கூறினார்.
பொதுவாக தன் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் லேடி ஆர்ட்டிஸ்ட்களின் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருப்பாராம் விஜயகாந்த். அதன் காரணமாகவே அன்று நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் நடிகைகளுக்கு எதுவும் ஆக கூடாது என்ற காரணத்தினால் அவர்களை மட்டும் காரில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார் கேப்டன்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனால என்ன ஆகப்போறாரோ!… புலம்பி தள்ளும் அயலான் பட இயக்குனர்…