Connect with us
MK-CP

Cinema History

சரித்திரம்.. சாதனை.. சகாப்தம் படைத்த கேப்டனின் வெற்றிப் படங்கள் – ஒரு பார்வை

கேப்டனைப் பொறுத்தவரை அவருக்கு அவரே தான் போட்டி. முந்தைய படங்களை விட அவை ரேஸில் முந்திச் செல்லும் வகையில் பல படங்கள் சாதனை படைத்துள்ளன. ஒரே ஆண்டில் பல படங்கள் வந்த போதும் எல்லாமே சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் 200 நாள் வரை ஓடிய படங்கள் பல உள்ளன. அவற்றைப் பார்க்கலாமா…

1981ல் சட்டம் ஒரு இருட்டறை 185 நாள், 1984ல், வைதேகி காத்திருந்தாள் 200 நாள், 1987ல் அம்மன் கோவில் கிழக்காலே 125 நாள், 1985ல் ஊமை விழிகள் 185 நாள், 1987ல் நினைவே ஒரு சங்கீதம் 200 நாள்களைக் கடந்து ஓடியது.

1987ல் சட்டம் ஒரு விளையாட்டு படம் 165 நாள்களைக் கடந்து ஓடியது. 1987ல் வெளிவந்த உழவன் மகன் 175 நாள்களைக் கடந்து ஓடியது. அதே ஆண்டில் வெளியான கூலிக்காரன் படம் 165 நாள்களைக் கடந்து ஓடியது. 1988ல் நல்லவன் படம் 188 நாள்கள் ஓடியது.

அதே ஆண்டில் வெளியான செந்தூரப்பூவே 188 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1989ல் வெளியான பாட்டுக்கு ஒரு தலைவன் படம் 165 நாள்களைக் கடந்து ஓடியது. அதே ஆண்டில் வெளியான பொன்மனச் செல்வன் படம் 165 நாள்களைக் கடந்து ஓடியது.

Chinnakavundar

Chinnakavundar

1990ல் வெளியான சத்ரியன் படம் 185 நாள்களைக் கடந்து ஓடியது. அதே ஆண்டில் வெளியான புலன் விசாரணை படமும் 175 நாள்களைக் கடந்து ஓடியது. புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன். இது 1991ல் வெளியானது. 300 நாள்கள் ஓடி சரித்திர சாதனை படைத்தது. 1991ல் வெளியான மாநகர காவல் படம் 185 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

1992ல் வெளியான சின்னக்கவுண்டர் படம் 275 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1993ல் வெளியான படம் ஏழை ஜாதி. இது 175 நாள் கடந்து ஓடியது. அதே ஆண்டில் வெளியான செந்தூரபாண்டி 165 நாள்களைக் கடந்து ஓடியது.

1994ல் வெளியான என் ஆசை மச்சான் படம் 175 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதே ஆண்டில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் 165 நாள்கள் ஓடியது. 1999ல் கண்ணுபட போகுதைய்யா படம் வெளியாகி 165 நாள்களைக் கடந்து ஓடியது. 2000ல் வெளியான வானத்தைப் போல படம் 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

அதே ஆண்டில் வெளியான வல்லரசு படம் 185 நாள்களைக் கடந்து ஓடியது. 2001ல் வாஞ்சிநாதன் 155 நாள்களைக் கடந்து ஓடியது. அதே ஆண்டில் வெளியான தவசி படம் 175 நாள்களைக் கடந்து ஓடியது. 2002ல் வெளியான ரமணா படம் 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top