ஏய் அதான் தெரியாதுன்னு சொல்றன்ல்ல!.. ரெய்டு பண்ண வந்த அதிகாரிகளையே நாக்கை மடித்து மிரட்டிய கேப்டன்..

by prabhanjani |
vijayakanth
X

நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த்தை பற்றி சினிமா வட்டாரத்தில் யாருமே தவறாக பேச மாட்டார்கள். அவ்வளவு நல்ல பெயரையும், மரியாதையையும் சம்பாத்து வைத்திருந்தார் விஜயாகாந்த். பொதுமக்கள் மத்தியிலும் இன்றளவும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓய்வெடுத்து வருகிறார்.

Vijayakanth4

நடிகர் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா பல சுவாரசிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜயகாந்த் படத்தின் கதை பிடித்திருந்தால் அதில் நடிப்பார். சம்பளம் பற்றியெல்லாம் கேட்க கூட மாட்டார். சம்பள பாக்கி இருந்தாலும் வந்து டப்பிங் செய்து முடித்துக் கொடுப்பார். சம்பளம் தரவில்லை என்றால் கூட அதை கேட்க மாட்டார் என்று தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.

மேலும் அவரின் சம்பள விவரங்களை பற்றியெல்லாம் விஜயகாந்திற்கே தெரியாது என்றும், அனைத்தையும் சுற்றி இருப்பவர்களும், அவரது மேனேஜரும் தான் பார்த்துகொள்வார்கள் என்றும் டி.சிவா கூறியுள்ளார். ஒரு முறை அவர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த சோதனை நடத்திய வந்த போது, விஜயகாந்த்தை தனியாக அழைத்து சென்று அவர்கள் விசாரணை செய்துள்ளனர்.

vijayakanth

vijayakanth

அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்டுள்ளனர். இந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள், அந்த இடத்தை இவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீர்கள், உங்கள் மொத்த சொத்து மதிப்பு என்ன என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் தெரியாது தெரியாது என விஜயகாந்த் பதிலளித்துள்ளார். அவர் வேண்டுமென்றே அப்படி செய்கிறார் என அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

vijayakanth2

மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்ததால், கடுப்பான விஜயகாந்த், அவரது ஸ்டைலில் நாக்கை மடித்து ‘ஏய், அதான் தெரியாதுனு சொல்றேன் ல’ என்று அதட்டியுள்ளார். பயந்து போன அதிகாரிகள் பிறகு அவரது மேனேஜர் மற்றும் வீட்டிலிருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, உண்மையிலேயே இவருக்கு சொத்து, பணம் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்பதை உணர்ந்து ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

vijayakanth

ரெய்டு முடிந்து செல்லும் போது அவர்கள், விஜயகாந்த்திடம் வந்து, இப்படி ஒருவரை நாங்கள் பார்த்ததே இல்லை, அதனால் தான் நீங்கள் மிக நிம்மதியாக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துவிட்டு சென்றார்கள் என தயாரிப்பாளர் டி.சிவா பேட்டி ஒன்றில் கூறி நெகிழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க- அரசியல் புரிதல் இல்லாம தப்பா படம் எடுத்துட்டேன்- வருந்திய மாவீரன் இயக்குநர்

Next Story