Cinema History
விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!
விஜயகாந்தும், இப்ராகிம் ராவுத்தரும் நகமும் சதையும் போல, ஈருடல் ஓருயிர் போல இணைபிரியா நண்பர்கள். விஜயகாந்தின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருந்தது ராவுத்தர் தான்.
அவரது சினிமா வாழ்க்கையில் வெற்றிப் படிக்கட்டுகளை நோக்கி கொண்டு சென்றவர் இவர் தான். விஜயகாந்த் சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்தார். கருப்பா இருந்தா ரஜினின்னு நினைப்பான்னு சொன்னாங்க. இவருக்கெல்லாம் ஜோடியா நடிச்சா நம்ம மார்க்கெட் காலின்னாங்க. பணத்தைக் கொண்டு வா, ஹீரோ சான்ஸ் தாரேன்னும் சொன்னாங்க. இப்படி பல அவமானங்களைப் பட்டுத் தான் படிப்படியாக சினிமாவில் முன்னேறினார் விஜயகாந்த். ஆனால் அதன்பிறகு நடந்தது தான் ஹைலைட். கருப்பு ரஜினியா என்று கேட்டவர்கள் மத்தியில் அதையும் தாண்டி கருப்பு எம்ஜிஆர் என்று மக்களால் போற்றப்பட்டார் கேப்டன்.
விஜயகாந்தை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று உண்டு என்றால் அவரது உயிர் நண்பர் இப்ராகிம் ராவுத்தரின் மரணம் தான். மதுரையில் 9ம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். சினிமாவில் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ராவுத்தர் தான். விஜயகாந்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று அவருக்காகவே உழைத்தவர். இன்னும் சொல்லப் போனால் விஜயகாந்துக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார் ராவுத்தர்.
ஒரு சில சூழ்நிலைகளால் விஜயகாந்தை விட்டுப் பிரிய வேண்டிய நிலைக்கு ஆளானார் ராவுத்தர். நண்பனுக்காகவே வாழ்ந்தோம். இப்போது நம்மை கைவிட்டு விட்டானே என்ற சோகம் அவரது நெஞ்சைப் பிழியத் தொடங்கியது. வாழ்க்கையில் நொடிந்து போனார். உடல் நலம் பாதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. நண்பனே கைவிட்ட பின் இனி வாழ்ந்து எதற்கு என்று எண்ணினார். அதனால் சிகிச்சையே எடுக்க மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் கோமோவிற்குச் சென்றுவிட்டார். அப்போது தான் விஜயகாந்த் போய் பார்த்தார்.
இதையும் படிங்க… அஜித்துக்கு இந்த விஷயத்துல கோபம் அதிகமா வரும்! மாட்டிக்கிட்டு முழித்த டெக்னீசியன்கள்
ராவுத்தரு ராவுத்தரு என கலங்கினார். சில நாள்களில் இப்ராகிம் ராவுத்தர் இறந்து விட்டார். அதன்பிறகு விஜயகாந்த் வாழ்க்கைப் படிப்படியாக பின்னோக்கி சென்றது. அரசியலிலும் அவருக்கு நண்பர்கள் துரோகியானார்கள். நம்பிக்கைத் துரோகம், நண்பனின் மரணம் என இரண்டும் சேர்ந்து விஜயகாந்த் மனதை வாட்டியது. மனது முழுவதும் சோகச்சுவடுகள். இனி சிகிச்சை எடுத்தா என்ன? எடுக்காவிட்டால் தான் என்ன ஆகப்போகிறது என்ற நிலைக்கு ஆளானார் அந்த இரும்பு மனிதன்.