1. Home
  2. Bigg boss

பிக் பாஸா? மாஸ்டர் செஃப்பா?.. மீசை இல்லாமல் ஆரம்பமே சொதப்பிய விஜய் சேதுபதி!.. வீடு எப்படி இருக்கு?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நாளை முதல் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதி சுற்றிக் காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி இந்த ஆண்டு வெளியானது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் இத்தனை ஆண்டுகளாக வெளியாகவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரு ஷோ மூலமாக கட்டி இழுத்து விடும் மேஜிக்கை விஜய் டிவி கடந்த 7 சீசன்களில் வந்தது.

அதற்கு முக்கிய காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் தான். சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகிறார். அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பகட்ட ப்ரோமோவில் விஜய் சேதுபதியின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் விஜய் சேதுபதி மீசைய முழுவதுமாக சேவ் செய்துவிட்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் வருவதை போல வந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

பிக் பாஸ் கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சியிலாவது விஜய் சேதுபதி அதே லுக்கில் வந்திருக்கலாம் என்றும் அடுத்த படத்துக்காக அவர் மீசை எடுத்துள்ள நிலையில் கோட் சூட் மற்றும் மேக்கப் சுத்தமாக செட்டாகவில்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறும் போட்டியாளர்களை எல்லாம் விஜய் சேதுபதி இந்த சீசனில் எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற கேள்விகள் தான் பலர் மனதில் தற்போது எழுந்துள்ளன. வழக்கம் போல தத்துவமாக பேசி கமல்ஹாசனையே ஓவர்டேக் செய்து விடுவாரே மக்கள் செல்வன் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் நிகழ்ச்சியை சூப்பராக கொண்டு சென்றால் நிச்சயம் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.