Home News Reviews Throwback Television Gallery Gossips

கிளம்புங்க கிளம்புங்க… பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் அப்டேட்

Published on: November 7, 2024
---Advertisement---

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் இந்த வாரம் மீண்டும் ஒரு பெண் போட்டியாளர் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஒரு மாதத்தை கடந்திருக்கும் நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த வாரம் ஆள்மாறாட்டம் டாஸ்க்வைத்து இருந்தனர். ஒரு போட்டியாளர் போல் இன்னொருவர் நாள் முழுவதும் இருக்க வேண்டும்.

இதில் பலரும் மிகச் சிறப்பாக செய்து தங்களுடைய பங்களிப்பை கொடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு தேவையான சர்ச்சையையும் கிளப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு கேட்க நிறைய பிரச்சினைகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஜெஃப்ரி, அருண் பிரசாத், ரஞ்சித், ஜாக்குலின், அன்ஷிதா, சுனிதா, பவித்ரா, சத்யா மற்றும் தீபக் இடம் பிடித்திருந்தனர். இதில் அதிகாரப்பூர்வமற்ற வாக்குப்பதிவில் முதலிடத்தை ஜெஃப்ரி பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த இடங்களில் ஜாக்லின் மற்றும் அருண் பிரசாத் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் சீரியல் அன்சிதா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் செல்லமா சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் அன்ஷிதா.

அந்த சீரியலில் தன்னுடன் நடித்த அர்னவுடன் இவரை அவர் மனைவி திவ்யா குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் அர்னவ் மற்றும் அன்சிதா நிகழ்ச்சிக்குள் வந்திருந்தனர். இரண்டே வாரத்தில் அர்னவ் வெளியேற தற்போது அன்ஷிதாவும் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment