இவங்களுக்கு தான் பெத்த தொகை… பிக்பாஸ் தமிழ் 8 போட்டியாளர்களின் சம்பளம் லீக்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:19  )

Biggboss tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் சூடுபிடித்து வரும் நிலையில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு ஒருநாளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

முதல் நாள் நிகழ்ச்சியிலேயே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தினார். போட்டியாளர்களுக்கு தேவையான இடங்களில் ஆதரவையும், கலாய்க்க வேண்டிய இடத்தில் கொட்டையும் வைத்து ரசிகர்களிடம் மாஸ் காட்டினார். இதனால் பிக்பாஸ் தமிழ் 8 சூடு பிடித்தது.

இந்நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் அதிகம் என்பதால் இவர்களுக்கான சம்பளம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

அதன் அடிப்படையில், சின்னத்திரை நடிகை தர்ஷிகாவுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

பிரபல தொகுப்பாளர் ஜாக்லின் சம்பளமாக 30 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. பிரபல நடிகர் ரஞ்சித்திற்கு 50 ஆயிரம் ஒரு நாளைக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அதுப்போல பிரபல தயாரிப்பாளர் ரவீந்தருக்கு 50 ஆயிரம் கொடுக்கப்பட வேண்டும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல தொகுப்பாளர் தீபக்கிற்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரமும், மகாராஜா பட நாயகி சாச்சனாவுக்கு 30 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. விஜய் டிவி நடிகை அன்ஷிதாவுக்கு 20 ஆயிரம், சௌந்தர்யாவுக்கு 10 ஆயிரம், அருண் பிரசாத்துக்கு 20 ஆயிரம், சர்ச்சை நடிகர் அர்னவுக்கு 20 ஆயிரம்

கொடுக்கப்பட்டு வருகிறது.

தொகுப்பாளர் முத்துக்குமரனுக்கு 10 ஆயிரமும், ஆர் ஜே ஆனந்திக்கு 10 ஆயிரம், சீரியல் நடிகர் சத்யாவுக்கு 20 ஆயிரம், வி.ஜே விஷாலுக்கு 20 ஆயிரம், சுனிதாவுக்கு 20 ஆயிரம், ஜெஃப்ரிக்கு 10 ஆயிரம், தர்ஷா குப்தாவுக்கு ஒருநாளைக்கு 30 ஆயிரம், பவித்ராவுக்கு 20 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.

Next Story