1. Home
  2. Bigg boss

Bigg Boss Tamil 8: ஆர்ஜே ஆனந்திக்கு எதிராக குரல்கொடுக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்! நீங்களும் பெண்தானே?

இந்தளவுக்கு வொர்ஸ்டா இருக்காங்களே! ஆர் ஜே ஆனந்தியை வெளுத்து வாங்கும் பிக்பாஸ் ரசிர்கள்

Biggboss Tamil:விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன். இதற்கு முன் நடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த எட்டாவது சீசன் முற்றிலும் வித்தியாசமான விதிமுறைகளை கொண்டதாக இருக்கின்றது.

ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து இந்த சீசனில் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஆண்களிலிருந்து ஒருவரும் பெண்களில் இருந்து ஒருவரும் தங்கள் அணிக்காக விளையாடுவதை பார்க்க முடிகிறது.

இது ஒரு வகையில் சுவாரசியமாக இருந்தாலும் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த அளவு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் ஆண்களா பெண்களா என்ற வகையில் போட்டி நடப்பதாகவே இந்த சீசன் நமக்கு உணர்த்துகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஆண்கள் அணையில் இருந்து ஜெஃப்ரியும் பெண்கள் அணியில் இருந்து சச்சனாவும் தங்கள் அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.

இதில் சாச்சனாவுக்கு ஆரம்ப முதல் வாரத்திலேயே சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. நேற்று அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட அவரை சகப் போட்டியாளரான அருண் பிரசாத் பெண்கள் அறையில் இருக்கும் கன்ஃபெஷன் அறைக்கு இவரே அழைத்து சென்று இருந்தார்.

இதை பெண்கள் அணியில் இருந்து நிறைய பேர் எதிர்த்தனர். குறிப்பாக ஆர் ஜே ஆனந்தி அது எப்படி? இவர் விதிமுறைகளை மீறி இங்கு வந்து சச்சனாவை விடலாம் என கேட்பது போல புரோமோவில் தெரிகிறது. போட்டி விதிமுறை இவற்றையெல்லாம் மீறி ஒரு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட அருணின் இந்த செய்கையை போட்டி மனப்பான்மையுடன் பார்த்த ஆர் ஜே ஆனந்திக்கு எதிராக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதுவும் சாச்சனாவும் ஒரு பெண். ஆர் ஜே ஆனந்தியும் ஒரு பெண். அந்த வகையிலாவது அக்கறையுடன் ஏதாவது பேசி இருக்கலாமே? அது எப்படி அருண் இங்கு உள்ளே வர முடியும் என்றவாறு பேசியது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. அவருக்கு எதிராக பல ரசிகர்கள் கமெண்டில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.