1. Home
  2. Bigg boss

அம்மணி கலக்குறாங்களே… பிக்பாஸ் இந்தியில் தெறிக்கவிடும் ஸ்ருதிகா… கப்பு முக்கியம் பிகிலே!...

குக் வித் கோமாளி மூலம் ஸ்ருதிகா அதிக புகழ் பெற்றார்

Shrutika: நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தற்போது பிக் பாஸ் ஹிந்தி 18 ஆவது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் குறித்து சில வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பல பெரும் நடிகை தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா. இவர் சூர்யாவின் ஸ்ரீ திரைப்படத்திலும், நளதமயந்தி திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக உள்ளிட்ட நான்கு திரைப்படத்தில் நடித்திருப்பார். எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் தோல்வி படங்கள் தான்.

இதை தொடர்ந்து ஸ்ருதிகா நடிப்பை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். அதன் மூலம் கோல்ட் மெடலில் படிப்பை முடித்த ஸ்ருதிகா ஆயுர்வேதா கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். பல வருட இடைவேளைக்கு பின்னர் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

முதல் எபிசோடில் இருந்து இவருடைய குழந்தை தனமான நடவடிக்கை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ் குவித்தனர். படங்களின் மூலம் தோல்வியின் நடிகையாக வெளியேறிய ஸ்ருதிகா தன்னுடைய குணத்தால் மீண்டும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து அந்த சீசனின் வெற்றியாளராகவும் மகுடம் சூடினார்.

இந்நிலையில் தென்னிந்தியாவிலிருந்து பிக் பாஸ் ஹிந்தி சீசனுக்கு சென்று இருக்கும் முதல் நடிகை என்ற அந்தஸ்தை ஸ்ருதிகா பெற்று இருக்கிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

முதல் நாள் எபிசோடில் சிரித்துக்கொண்டே அவர் பேசியதை வட இந்திய ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்காமல் போனது. இவர் பொய்யாக இருக்கிறாரோ என்ற பதிவுகளை இணையத்தில் பார்க்க முடிந்தது. இரண்டு நாட்கள் கடந்த நிலையில் தற்போது ஸ்ருதிகாவிற்கு வட இந்தியாவில் ஆதரவு பெருகி இருக்கிறது.

தொடர்ந்து மொக்கை போடாமல் கலகலப்பாக அவர் பேசுவதை ரசிகர்கள் ரசிக்க தொடங்கி இருக்கின்றனர். அனாவசியமான சண்டைகள் இல்லாமல் கலகலப்பாக இருக்கும் பிக் பாஸ் ஹிந்தி வீடு வட இந்திய ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

முதல் நாளில் நான் நான்கு படங்கள் நாயகியாக நடித்தேன். ஆனால் அது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்விதான் என ஓப்பனாக பேசியதும் வைரலாகி வருகிறது. தன்னுடைய கணவர் குறித்து அவர் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதாலும்.தற்போது ஸ்ருதிகா மீண்டும் வைரலாகி வருகிறார். அடுத்தடுத்த புரோமோக்களில் அவருடைய முகம் இடம்பெறும் நிலையில் தொடர்ந்து வீட்டில் அவர் வரவேற்பை பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.