மம்முட்டிக்கு என்னதான் ஆச்சு? பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

mamootty
தமிழ்த்திரை உலகில் வந்து ஒரு காலத்தில் கோலோச்சியவர் நடிகர் மம்முட்டி. கேரளாவில் இவர்தான் சூப்பர்ஸ்டார். இவருடைய தமிழ்ப்படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட்தான். அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல் போன்ற படங்களில்; மம்முட்டியை ரசிக்காத தமிழ் ரசிகர்களே இல்லை எனலாம். அவரது தமிழ் உச்சரிப்பு 'நச்'சுன்னு இருக்கும். அப்படி தமிழ் நடிகர்கள் கூட தெளிவா பேசமாட்டாங்க.
அதே மாதிரி ரஜினியோடு சேர்ந்து அவர் நடித்த தளபதி படம் இன்று வரை பேசப்படும். படத்துல அவ்ளோ சிறப்பா நடிச்சிருந்தாரு. சமீபத்தில் மீடியாக்களில் அவரு பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. அவருக்கு கேன்சர்னும், அது இல்லன்னும் சொல்றாங்க. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.
மலையாள சினிமாவுக்கே பெருமை சேர்த்த படம் லூசிஃபர். அதனால்தான் லூசிஃபர் 2 எம்புரான் படத்துக்கு இசை வெளியீட்டு விழா, பிரஸ்மீட் எல்லாம் நடந்துள்ளது. மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டிக்கு 74 வயசு இருக்கும். இவருக்கு வயதே ஆகாது போல என்று பேசும் வகையில் இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு கேன்சர்னு எல்லாம் தகவல் வந்தது. இது உண்மையா என்று பார்த்தால் அவரது மகன் அவருக்கு எல்லாம் ஒன்றுமில்லை. நோன்பு இருக்குறதால நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டாராம்.

mamootty
நடிகர் மோகன்லால் சபரிமலைக்கு சமீபத்தில் சென்றார். அவர் ஒரு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அவரது நண்பர் முகமது குட்டிக்காக ஐயப்பனிடம் ஒரு சீட்டில் பேரு எழுதி வேண்டுதல் வைத்துள்ளார். அவர் வேறு யாருமல்ல. மம்முட்டிதான். அவரது இயற்பெயர்தான் முகமது குட்டி. அப்படி என்றால் அந்த வேண்டுதலுக்கான காரணம் என்ன? உண்மையிலேயே உடல்நிலை சரியில்லையா என சந்தேகம் எழுகிறது.
இந்தியாவிலேயே ஆகச்சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. நடிகரைத் தாண்டி நல்ல மனிதர் என்றும் செய்யாறு பாலு அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.