நடிகர் மாநகரம் ஸ்ரீ சில பதிவுகளில் தன்னை அடையாளப்படுத்துவதற்காக நிலையான பாலினம் அற்றவர் என்று கேப்ஷன் போட்டுள்ளார். தோற்றம் வேறு அவரை வேறு மாதிரி காட்டுகிறது. அதனால்தான் இவர் இப்போது பேசுபொருளாகி விட்டார். குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
நிறைய திரைபிரபலங்கள் வீணாகப் போனதைப் பார்த்து மிரண்டுருக்கேன். உதாரணத்துக்கு சுதாகர் நடிச்ச படம் வருது. ஆனா அவர் வீணாப் போகல. அவரோட தைப்பொங்கல் படம் வருது. கூட ரஜினியோட முரட்டுக்காளை படம் வருது. சுதாகர் படத்தைப் பார்த்ததும் ரஜினி படத்தை ரிலீஸ் பண்ணலாமான்னு யோசிச்சாங்களாம். அந்தளவு வரப்போறாருன்னு எதிர்பார்த்தாங்க.
நடிகர் பாண்டியன் மஞ்சள்காமாலையில இறந்து போனாரு. கோரிப்பாளையம் இயக்குனர் ராசுமதுரவன் கேன்சர், நா.முத்துக்குமார் மஞ்சள்காமாலைல இறந்து போனாரு. பெரிசா வருவாங்கன்னு எதிர்பார்க்குற சில பேரு பெய்லியரா ஆகிடுறாங்க. நா.முத்துக்குமார் மாதிரி எல்லாம் யாராலும் எழுத முடியாது. அப்படி ஒரு பையன்தான் ஸ்ரீ. வழக்கு எண் 18, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுகப்பற்றுன்னு பல படங்களில் அசத்தலா நடிச்சிருக்கான். அந்தப் பையன் சிவப்பா அழகா இருந்தான்.

இன்னைக்குப் பார்த்தா அவனுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி தோற்றம். எலும்பும், தோலுமா முகம். நீண்ட தலைமுடி. அந்தப் பையனானே அடையாளம் தெரியல. கிட்னி பெய்லியரான்னும் சந்தேகம் வந்தது. டயலாசிஸ் பண்ணினாலும் இப்படி பிரச்சனை வரும். அதுவும் இல்லை. அப்புறம் அரைகுறை போட்டாவா வெளியிட ஆரம்பிச்சிட்டான். கடைசியில இப்ப LGBQTல வந்து நிக்குது.
100 சதவீத ஜென்யூன்னு போட்டுருக்கான். அப்போ போதைப்பொருள், LGBQTன்னு ஏதோ ஒரு இடத்துல போய் லாக் ஆகிருக்கான். பட வாய்ப்புகளுக்கு யாரையும் தேடிப் போகல. தேடாம இருந்தா எதுவும் கிடைக்காது. எல்லாருக்கும் எல்லா சந்தர்ப்பமும் அமைஞ்சிடாது. லோகேஷ் கனகராஜ் படத்துல நடிச்சிருக்காரு. அடுத்து விக்ரம் படத்தை எடுக்கும்போது அவரு ஆபீஸ்ல போய் வாய்ப்பு கேட்டாதானே கொடுப்பாங்க.
டைரக்டருக்கு ஹீரோ, ஹீரோயின் கிடைக்காம இல்லை. 100 பேரு இருக்காங்க. அங்கே போய் சுயமரியாதையோடு இருந்தா சான்ஸ் கிடைக்காது. எல்ஜிபிக்யூடியை எல்லாம் அங்கீகரிக்கவே கூடாது. அது ரொம்ப ஆபத்து. இயற்கைக்கு மாறானது. சட்டத்துலே இயற்கைக்கு மாறான புணர்ச்சின்னு சொல்லிருக்காங்க. அதைப் போய் அங்கீகரிக்கிறான் இந்தப் பையன். கணவன், மனைவி மேலயே இது மாதிரி நடந்தா கிரிமினல் கேஸ் போடலாம்.
இந்தப் பையன பார்த்தா ஏதோ ஒரு நோய் வந்த மாதிரி இருக்கான். LGBQTக்கு போயிட்டானாமே. இவன்கூட யாரு பிரண்டா இருப்பாங்க? இவன் கூட யாரும் சேர மாட்டாங்க. ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சிருவாங்க. லோகேஷ் கனகராஜ் மாதிரி ஆள்கள் இவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தா மீண்டு வருவான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.