பாரதிராஜா, இளையராஜா இடையே ஆயிரம் முரண்பாடுகள்… ஆனாலும் அதுல ஒண்ணாயிட்டாங்களே!

#image_title
பாரதிராஜாவின் மீளாத்துயரைத் துடைக்கும் விதத்தில் கங்கை அமரன் நேற்று அவரை வீட்டில் போய்ப் பார்த்து பழைய நினைவுகளை அசை போட்டுள்ளார். அந்த வீடியோ நேற்று வைரலானது. இளம் வயதிலேயே பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன் மூவரும் இணைபிரியா நண்பர்கள். குடும்பரீதியான உறவுகள்னே சொல்லலாம்.
ஒரே காலகட்டத்தில் இணைந்த நண்பர்கள் சினிமாவிலும் ஒரே கட்டத்தில் உச்சகட்டத்தை அடைந்தனர். பாரதிராஜா இயக்குனர் இமயம் ஆனார். இளையராஜா இசைஞானி ஆனார். தனது நண்பரோட தம்பியைத் தனக்குத் தம்பியாகப் பார்க்கிறார் பாரதிராஜா. அந்த மாதிரி கங்கை அமரனுக்கு அவர் கொடுத்த வாய்ப்பு தான் சிறு பொன்மணி அசையும் பாடல். அதை எழுதியவர் கங்கை அமரன்தான்.
அதை எல்லாம் நேற்றைய வீடியோவில் பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் நினைவுபடுத்தினார். உடன் உள்ள உதவி இயக்குனர்களை இயக்குனர்களாக்கி அழகு பார்ப்பவர் அவர். அப்படிப்பட்டவருக்கு முதுமையில் இப்படி ஒரு புத்திர சோகம் வரக்கூடாது. அவரது சிந்தனை பையனை நோக்கியே இருக்குது. அதே நேரம் கங்கை அமரன் பேசுவதையும் இடையிடையே கேட்டு ரசிக்கிறார்.
பிரம்மாண்டமாகக் கம்பீரமாகப் பார்த்த பாரதிராஜா இன்று கூனிக்குறுகி உடைந்து போய் இருப்பதை நெஞ்சை உருக்குவதாய் இருந்தது. தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிக்கிறவன் தான் உண்மையான நட்பு. அந்த வகையில் கங்கை அமரன் வந்து ஆறுதல் படுத்துவது சிறப்பு. வறுமையில் ஒண்ணாக சந்தோஷமாகக் கழித்தவர்கள்தான் இவர்கள். இந்த நினைவுகளை மீட்டு எடுக்குறதுக்கு அதுபோன்ற நண்பர்களால் மட்டுமே முடியும். இதுக்கு மருந்து, மாத்திரைகள் எல்லாம் கிடையாது.
பாரதிராஜா, இளையராஜா இடையே ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் பவதாரிணி இறந்த அன்று போய்ப் பார்க்கிறார். மனோஜ் இளையராஜாவை அப்பான்னு தான் சொல்றாரு. அந்த வகையில் இளையராஜா, பாரதிராஜா இருவருக்குமே முதுமையில் இப்படி ஒரு சோகம் வந்து இருப்பது காலக்கொடுமைதான். அன்றைய தலைமுறை போல் இப்போது கிடையாது. உணர்வுகளே இல்லை. சாதி மதமே இல்லைங்கற மாதிரி வேதம்புதிது படத்தை அவ்ளோ அழகா எடுத்தாரு பாரதிராஜா.
இன்னைக்கு சினிமாவுக்குள் ஜாதி, மதம் பெருகிடுச்சு. பெரிய படைப்பாளிகள் எல்லாத்தையும் தாண்டி நண்பர்கள் என்பதில்தான் அவர்கள் வந்து நிக்கிறாங்க. முதல் மரியாதை படத்தில் ஒவ்வொரு காட்சியும் இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும். மண்சார்ந்த அந்தப் படங்கள் உணர்வுகளையும் தட்டி எழுப்பும். இயக்குனராக மட்டும் இல்லாமல் சமூக அக்கறையும் இருந்தது. இப்ப உள்ள இயக்குனர்களிடம் அது இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் சுபையர் தெரிவித்துள்ளார்.