பாலாவுக்குக் கொடுத்த கடனை திருப்பி கேட்காத சூர்யா… பிரபலம் சொல்லும் பின்னணி தகவல்

Published on: July 3, 2024
Surya, Bala
---Advertisement---

பாலா வணங்கான் படத்தின் மூலம் நிச்சயமா ஒரு அழுத்தமான இடத்தை மறுபடியும் பிடிப்பார். இதை நான் நம்புறேன். ஏன்னா அந்தப் படத்தோட சில காட்சிகளை நான் பார்த்தேன். ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். இன்னும் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் என்னென்ன தருகிறார் என்று பார்ப்போமா…

பழைய பாலாவை பார்க்குற மாதிரி இருந்துச்சு. இந்தப் படத்தை இன்னும் விளம்பரப்படுத்தும் வேலைகள்ல அந்தத் தயாரிப்பு நிறுவனம் இறங்கல. ஏன்னா அது ஆகஸ்ட் 15ம் தேதி தான் வரப்போகுது.

இதையும் படிங்க… விஜய் இடத்தை பிடிக்க சரியான ரூட்டை பிடித்த சிவகார்த்திகேயன்! 2026க்குள் இவர்தான் டாப்

இன்னும் அதிக நாள்கள் இருக்குறதால இவ்ளோ சீக்கிரமா படத்தோட புரோமோஷன் ஸ்டார்ட் பண்ண வேண்டாம். பிரம்மாண்டமா ஒரு ஆடியோ லாஞ்ச் வச்சிட்டு புரோமோஷன ஸ்டார்ட் பண்ணி ரிலீஸ் வரைக்கும் கொண்டு போவாங்க.

நிச்சயம் மீண்டும் ஒரு பாலா பற்றிய பேச்சு வரும். வணங்கான் படம் ஆரம்பிக்கும்போது சூர்யா தான் தயாரிப்பாளரா இருந்தாரு. அந்த சமயத்தில பாலாவுக்கு சில கோடிகள் கொடுத்து உதவி செய்தார். அவை எல்லாம் செலவாகி விட்டது. அந்தப் பணத்தை சூர்யா திருப்பி வாங்கல.

அதுல மனக்கசப்பு ஏதும் இருக்கா? ஆடியோ லாஞ்சுக்கு சூர்யா வருவாரான்னு அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

சூர்யாவை அழைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. ஏன்னா பாலா வந்து ரொம்ப பெருந்தன்மையா இந்த விஷயத்துல நடந்துக்கிறாரு. ஏன்னா வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது.

Vanankan FL
Vanankan FL

அப்போ பாலா தயாரிப்பு நிறுவனங்களிடம் இதைத் தான் கேட்டாராம். என்னன்னா சூர்யா வீடு இருக்குற பகுதிகள்ல ஒட்ட வேண்டாம் என்று. என்ன காரணம்னா அந்த போஸ்டரை அவங்க பார்க்கும்போது ஏதோ வீம்புக்காக ஒட்டுன மாதிரி ஒரு ஃபீல் வரும். இந்தப் படத்துல இருந்து நீ வெளில போயிட்ட.

ஆனா நான் வேறொரு ஹீரோவை வச்சி இந்தப் படத்தை முடிச்சிட்டேன் பாரு. அப்படிங்கற தெனாவெட்டை அவங்க உணர்ந்துர்ற கூடாது. ஆனா அது சத்தியமா கிடையாது. அதனால நீங்க அந்தப் பகுதிகள்ல ஒட்டக்கூடாதுன்னு சொன்னாரு.

அதே மாதிரி சூர்யாவும் பாலாவிடம் பெருந்தன்மையா நடந்து கொள்கிறார். வணங்கான் படத்துக்காக 7 கோடி வரை சூர்யா செலவு பண்ணிருக்காரு. இதுவரைக்கும் அவர் பாலாவிடம் திருப்பிக் கொடுங்கன்னு கேட்கவே இல்லை. இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் வருத்தமோ, ஈகோவோ எதுவுமே இல்லை.

நாளைக்கு வணங்கான் சூப்பரா இருக்குன்னா, ‘அண்ணே படம் நல்லாருக்குண்ணேன். நான் தான் மிஸ் பண்ணிட்டேன்’னு சூர்யா சர்வ சாதாரணமா சொல்லிட்டாரு. அவர்களுக்குள் ஒன்றுமே இல்ல. இணக்கமான சூழல் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாலா சூர்யாவுக்கு பிதாமகன், நந்தா என பல பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.