வடிவேலுவுக்கு என்னாச்சு? கேங்கர்ஸ் படம் ஓடாததற்கு பிரபலம் அடுக்கும் காரணங்கள்

gangers
Vadivelu: ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்த படம் கேங்கர்ஸ். இதுல சுந்தர்.சி., வடிவேலு காம்போ இருக்கு. ஏற்கனவே இவங்க நகரம் மறுபக்கம் ஹிட் கொடுத்தவங்க. நல்லாருக்கும்னு எதிர்பார்த்தாங்க. டிரைலரைப் பார்த்ததும் வடிவேலுவுக்கு கம்பேக்னாங்க. ஆனா படம் படுபிளாப் ஆனது. இதற்கு என்ன காரணம்? இதுகுறித்த தகவல்களை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
என் ராசாவின் மனசிலே, சின்னக்கவுண்டர், தேவர்மகன், வின்னர், சிங்காரவேலன் படங்களைத் தொடர்ந்து பிரண்ட்ஸ் படத்துல வடிவேலுவைப் பார்த்தாங்க. தலைநகரம் படத்துல வடிவேலுவை பார்த்தாங்க. நானும் ரௌடிதான்னு சொல்லி காமெடியில் அதகளப்படுத்துவார். அந்த மாதிரி காமெடி பண்ணின வடிவேலு இப்போ இல்லை. இனி அப்படி பார்க்க முடியாது. நாம தான் சினிமாவுல பெரிய ஆளுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாரு.
வடிவேலு சாதாரணமான ஆளா நினைச்சிக்கிட்டு மக்கள் மத்தியில் வந்தால் தான் அவனை ரசிப்பாங்க. கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டுக்கிட்டு இருந்தா அந்த இமேஜ் தான் ஆடியன்ஸ்சுக்குப் போய் பதியும். அது வில்லன் ரேஞ்சுக்கு இருக்கும். 2011 தேர்தல் பிரசாரத்துல வடிவேலு ஒரு கட்சி சார்பாக ஏறி விஜயகாந்தின் மீது தனி மனித தாக்குதல் நடத்தினார் வடிவேலு. அது எல்லா சோஷியல் மீடியாவுலயும் வருது. மக்கள் பார்க்க ஆரம்பிக்கிறாங்க.

அப்போ இப்படி ஒரு காமெடி நடிகரா இப்படி எல்லாம் பேசுறாருன்னு பார்த்தாங்க. அதனால அவர் மேல வேற இமேஜ் பதியுது. அதுக்கு அப்புறம் படங்களே இல்லாம இருக்காரு. எலி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படங்கள் வந்தது. ஒண்ணும் எடுபடல. காமெடியன்கற விஷயம் மக்கள்கிட்ட இருந்து வெளியில போச்சு. ஆரம்பத்துல ப்ரண்ட்ஸ்ல, வின்னர்ல இருந்த வடிவேலுவும், இப்ப இருக்குற வடிவேலுவும் கம்பேர் பண்ணிப்பாருங்க. சிரிப்பே வராது. காரணம் உடல்வாகுவே மாறிடுச்சு.
இனிமே ஒண்ணும் பண்ண முடியாது. இப்ப கூட கேங்கர்ஸ்ல கம்பேக்னு சொன்னாங்க. அதுல வடிவேலு காமெடியைப் பார்த்து நம்மளா சிரிச்சா தான் உண்டு. அவரு பாடி லாங்குவேஜே மாறிப்போச்சு. ஒரு சீன்ல கூட ரசிக்கிற மாதிரியே இல்ல. ஒரே ஒரு இடத்துல லேடி கெட்டப் போட்டுப் போவாரு. அது மட்டும் நல்லாருக்கு. மற்றபடி அது காமெடி படமே இல்லை. பழைய அதரபழசான கதை. சுந்தர்.சி.யோட அதே டெம்ப்ளேட். வடிவேலு டோட்டலா மாறிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.