கவுண்டமணி பற்றி யாரும் அறியாத தகவல்கள்… அட இப்படிப்பட்டவரா?

by sankaran v |   ( Updated:2025-05-06 21:36:20  )
Goundamani
X

Goundamani

Goundamani: கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவு திரையுலகையே பேரதிர்ச்சியாக்கியது. இது கவுண்டமணிக்கு பேரிடியாகவே இருந்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் கவுண்டமணியின் யாரும் அறியாத குணம் பற்றி செய்யாறு பாலு இப்படி
தெரிவித்துள்ளார்.

கவுண்டமணி என்னதான் பெரிய நகைச்சுவை ஜாம்பவான், லாரல் ஹார்ட்டின்னு சொன்னாலும் சரி. மனைவி இறந்ததும் உடைஞ்சி நொறுங்கிட்டாராம். அவரது இறுதி ஊர்வலம் மின்மயானத்துக்குப் போகும்போது தன்னை மீறி கலங்கி அழுத அழுகை இத்தனை வருடத்தின் ரீவைண்டாகத் தான் வந்துக்கிட்டே இருக்கும். கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த 3 வருடங்களாக படுக்கையில் இருந்துருக்காங்க.

அவங்க 2 மகள்கள்தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வயதான காலத்தில் தான் மனைவியின் அன்பு தேவைப்படுது. 85வயசுல ஆக்டிவா இருக்காரு. அத்தனை பேரையும் வரவேற்கிறாரு. விசாரிக்கிறாரு. உடைஞ்சிப் போனாலும் அதை முழுமையா காட்டல. சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்களோட அக்கம்பக்கத்துல உள்ளவங்க கூட பழக மாட்டாங்க.

தனக்கு இணையானவங்க கூடத்தான் பழகுவாங்க. ஆனா கவுண்டமணி மனைவி இறந்தபோது அக்கம்பக்கத்து வீட்டு ஆளுங்கதான் அடிச்சி பிடிச்சி ஓடி வந்தாங்க. அந்தளவு கவுண்டமணி பாகுபாடு இல்லாமல் அக்கம்பக்கத்தாருடன் இணக்கமாகப் பழகி இருக்காங்க.

#image_title

கவுண்டமணி கட் அண்ட் ரைட்டா பேசுவாரு. தான, தர்மம் பண்ண மாட்டாருன்னு சொல்வாங்க. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை பேசுபவர். அவரு ஒரு வெள்ளந்தியான மனிதர். எதையும் போல்டா நேருக்கு நேர் பேசக்கூடியவர். கவுண்டமணி வெளியில் தான் நக்கலும், நய்யாண்டியுமாகப் பேசுபவர். உள்ளுக்குள் அவர் ஒரு குழந்தை மாதிரி.

நடிகர் விஜய் தன்னோட பிசியான நேரத்துலயும் கவுண்டமணிக்காக நேரம் ஒதுக்கி கொடைக்கானல் ஜனநாயகன் சூட்டிங்ல இருந்து தேனாம்பேட்டை வந்து அவருக்கு கட்டிப்பிடிச்சி ஆறுதல் சொல்லிருக்காரு. ஏன்னா கோயம்புத்தூர் மாப்ளே படம் பண்ணும்போது கவுண்டமணி விஜய்க்கு அவ்ளோ ஐடியா கொடுத்தாராம். ஏன் உம்முன்னு இருக்க? கலகலன்னு பேசு. ஜாலியா இருன்னு சொல்வாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story