
Cinema News
விஜய் திறப்பு விழா… மகன் மூடுவிழா… லைகாவின் துரதிர்ஷ்ட வரலாறு! பணம் இருந்தால் போதுமா?
லைகா நிறுவனம் இந்தியன் 3 படத்தைத் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக்குமா என கேள்வி எழுந்தது. படத்தின் ஒரு பாடலுக்கு அதிகமான பொருள் செலவை ஷங்கர் கேட்டதாகவும் அதற்கு நிறுவனம் மறுத்ததாகவும் ஒரு தகவல் வந்தது. அதனால் படத்தில் இருந்து ஷங்கர் வெளியேறி விட்டதாகவும், படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வந்தது. இந்நிலையில் படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றும். லைகாவே சும்மா மரியாதைக்காக பேரை மட்டும் போட்டு இருப்பார்கள் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. இவர் வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.
லைகா நிறுவனத்துக்கு விஜய் மகன் எடுக்குற படம்தான் கடைசியா இருக்கும்னு நினைக்கிறேன். விஜய் நடித்த கத்தி லைகாவுக்கு முதல் படம். இது ஒரு வகையில துரதிர்ஷ்டமான வரலாறுதான். அந்த நிறுவனமே இப்ப மூடுவிழாவை நோக்கித்தான் போய்க்கிட்டு இருக்கு. எம்புரான் படமே 75கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும் தகவல் இருக்கு. கடைசி நேரத்துல அவங்களால முதல் போட முடியல. அதனால ஆசிர்வாத சினிமாவுக்கும், லைகாவுக்கும் கருத்து வேறுபாடு உண்டானது.

indian 3
அதுவே இந்தப் படத்தின் ரிலீஸையே தள்ளிப் போட்டுருக்கு. மார்ச் 27ல் ரிலீஸ் ஆவதாகத்தான் இருந்தது. கடைசி நேரத்துல கோகுலம் மூவீஸ் கோபாலன் உள்ளே வந்து லைகா பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்னு சொல்லி லைகாவை வெளியேற்றி விட்டாங்க. சுபாஷ்கரன்கிட்ட நிறைய பணம் இருக்கு. ஆனா அவர் இந்தக் கோடம்பாக்கத்தை அவதானிக்கத் தவறிவிட்டார்னுதான் நான் நினைக்கிறேன்.
ஏன்னா கோடம்பாக்கம் மாதிரி உலகத்துலயே மோசமான ஆள்கள் நிறைந்த இடம் கிடையாது. இங்கு சினிமா தெரியாம வரும் ஆள்களை மொட்டை அடிப்பதற்கே பெரும் கூட்டம் உள்ளது. இதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அவங்க வந்துருந்தா ஓரளவு தாக்குப்பிடிச்சிருக்க முடியும். இது எதுவுமே தெரியாம எங்கிட்ட பணம் இருக்குன்னு மட்டும் வந்ததால தான் இவ்ளோ தோல்வி. எவ்வளவு வேணாலும் பணம் இருக்கலாம். ஆனா எடுக்கப் போற படத்தோட லாப, நஷ்டம் தெரிஞ்சிருக்கணும். என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.