மாநகரம் ஸ்ரீ நிலைமைக்கு இதுதான் காரணம்… சீக்கிரமா குணப்படுத்திடுவாங்க… பிரபலம் லேட்டஸ்ட் அப்டேட்

managaram shri
managaram shri: இப்போது எங்கு திரும்பினாலும் மாநகரம் ஸ்ரீ பற்றிய பேச்சுத்தான். எல்லாம் அந்த ஒரு ஆபாச வீடியோ செய்த வேலை. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
மாநகரம் ஸ்ரீக்கு என்னாச்சு என்னாச்சுன்னு கேட்குறாங்க. தொடர் விரக்தி, ஏமாற்றம் இதெல்லாம் சேர்ந்து ஒரு மனிதனை மாற்றும். ஏதோ ஒரு தவறான பாதைக்கு அவரைக் கொண்டு போகும். அப்படித்தான் போயிட்டாருன்னு நம்புறேன்.
அவரோட தோழி சொல்றாங்க. அவரு டிரக்கே யூஸ் பண்றது இல்லைங்கறாங்க. ஆனா இப்போ அவரு ஃபேஸ் எல்லாம் பார்க்கும்போது டிரக்குக்கு அடிக்ட் ஆகிட்டோரோன்னுதான் பார்க்க வேண்டியுள்ளது. அதை அவருதான் மறுக்கணும்.
ஒரு துன்பத்தை சோகத்தைத் தாங்கக் கூடிய மனவலிமை உள்ளவர்கள் சினிமாவுக்கு வரணும். அப்படி இல்லாதவர்கள் வந்தால் நிறைய ஏமாற்றங்களை சந்திப்பாங்க. ஸ்ரீ மனவலிமை இல்லாதவராகத்தான் தெரியுது.

அவரை மீட்கறதுக்கான போராட்டம் ஒண்ணு தொடருது. அவரு எங்க இருக்காருன்னு கண்டுபிடிச்சிக் கொண்டு வர்ற வேலைகள் போகுது. அநேகமா இன்னும் நாலஞ்சு நாள்ல கொண்டு வந்துடுவாங்க. மருத்துவ பரிசோதனை எல்லாம் செய்வாங்க. எப்படியாவது நாம ஜெயிச்சிடணும்னுதான்சினிமா ஃபீல்டுல எல்லாரும் நினைப்பாங்க. அவங்க அவங்க வேலையைத் தான் பார்ப்பாங்க. நம்மளா உருண்டு புரண்டு எழுந்து வந்தால் தான் உண்டு.
அந்த வகையில ஸ்ரீ முயற்சி செய்யாம விட்டுட்டாருன்னுதான் தோணுது. ஸ்ரீ ஒரு பக்கம் நடிப்புக்கு வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்காரு. இன்னொரு பக்கம் ஸ்கிரிப்ட்;டைப் படிச்சி செலக்ட் பண்றாரு. இடையில இறுகப்பற்று படத்தின்போது அவருக்கு டிடிஎஸ்ல கொஞ்சம் சம்பளம் பாக்கி இருந்துருக்கு. சினிமாவுல சம்பளம் வராம போறது எல்லாம் இயல்பான விஷயம்தான். அது கொரானா டைம். வில் அம்பு படத்துல சம்பள பாக்கின்னு சொல்றாங்க. பழகுற விதத்துல தான் வாய்ப்பு கிடைக்கும். ஒரு படத்துல நடிச்சி ஜெயிச்சிட்டா எல்லாரும் வீடு தேடி வர மாட்டாங்க. பழக்கத்துக்காக வாய்ப்பு கொடுப்பாங்க. அந்த முயற்சியை ஸ்ரீ எடுத்தாரான்னு தெரியல. அவர் எல்லாருடையும் நெருங்கிப் பழகுறவர் இல்லை.
அவர் வெற்றி அடைந்த படங்கள் எல்லாமே டைரக்டர் படங்கள். மாநகரம் ஸ்ரீ எங்கே இருக்காருங்கறதை தொடர்ந்து தேடுறாங்க. அவங்க அம்மாவுக்கு மட்டும் வாரத்துக்கு ஒரு முறை பேசுவாராம். குரலை மட்டும் கேட்டுட்டு கட் பண்ணிடுவாராம். அவங்க அக்கா பேசுறாராம். லோகேஷ், எஸ்ஆர்.பிரபு தொடர்ந்து பேசுறாரு. எல்லா போனும் ரிங் போகுது. அவரு பார்த்துக்கிட்டே இருக்காரு. ஆனா சீக்கிரத்துல அவரைக் கொண்டு வந்துடுவாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.